பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

any key

35

Apple extended keyboard


any key : ஏதேனும் ஒரு விசை : கணினி விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசை. கணினியில் இயக்கப்படும் செயல்முறைத் தொகுப்புகள் சில, சில வேளைகளில் தொடர்ந்து செல்ல, ஏதேனும் ஒரு விசையை அழுத்தவும் (Press any key to continue) என்ற செய்தியை தருவதுண்டு. அப்போது பயனாளர் விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசையை அழுத்தலாம். விசைப் பலகையில் any என்ற பெயரில் ஒரு விசை இல்லை என்பதை அறிக.

any-to-any connectivity : எதிரிலிருந்து எதற்கும் இணைப்பு: பிணையங்களில் (network) பல்வகை உள்ளன. பிணையக் கட்டமைப்பிலும் (topology), புரவலர் வழங்கன் (hostl server) இனத்திலும், தகவல் பரிமாற்ற நெறிமுறையிலும் (protocol) பல்வேறு வகைகளும் முறைகளும் உள்ளன. பல்வகைச் சூழலும் ஒருங்கிணைந்த ஒரு பிணையக் கட்டமைப்பில் தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் அதனை எதிலிருந்து எதற்குமான (any to any) இணைப்பு என்கிறோம்.

APPC : ஏபீபீசி : 1. உயர்நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று பொருள்படும் Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தின் (Systems Network Architecture) ஓர் அங்கமாக இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது. வேறுபட்ட கணினி முறைமைகளில் இயங்குகின்ற பயன்பாட்டுத் தொகுப்புகள். தமக்குள்ளே தொடர்பு கொள்ளவும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் வகையில் இந்நெறிமுறை உருவாக்கப்பட்டது.

appearance : தோற்றம் .

append mode : சேர் பாங்கு.

append record : சேர் எடு.

Apple Il : ஆப்பிள் II : ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 1977இல் அறிமுகப்படுத்திய இரண்டாவது சொந்தக்கணினி (Personal Computer). இதில் 4கே இயங்குநிலை நினைவகம் இருந்தது. 48கே வரை விரிவாக்கிக் கொள்ளலாம். 6502 என்னும் நுண்செயலி பயன்படுத்தப்பட்டது. வண்ணக் கணினித் திரைக்குப் பதிலாக, தொலைக்காட்சிப் பெட்டியைப் பயன் படுத்திக்கொள்ளும் வசதி முதன் முதலாக ஆப்பிள் II கணினியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் எட்டு விரிவாக்கச் செருகுவாய்கள் (expansion slots)இருந்தன.

Apple Draw : ஆப்பிள் டிரா : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படக்கூடிய படம் வரையப் பயன்படும் ஒரு பகிர்வு மென்பொருள் (shareware) தொகுப்பு.

Apple Events : : ஆப்பிள் மேக் ஓஎஸ் சிஸ்டம் 7 இயக்க முறைமையில் சேர்க்கப்பட்ட ஒரு பயன்பாடு. இதன்மூலம் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலிருந்து இன்னொரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு சேமி, திற, மூடு போன்ற கட்டளைகளை அனுப்ப முடியும்.

Apple extended keyboard : நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப்பலகை : பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி