பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

R&D

372

radix-minus-1 complement



R

R&D : ஆர்&டி : ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருள்படும் Research and Development stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

RAD : ரேடு : அதிவேகப் பயன்பாட்டு உருவாக்கம் எனப் பொருள்படும் Rapid Application Development என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப் படுத்துவதில் ஒரு வழிமுறை. முழுத் திட்டப் பணியும் முடியும்வரைக் காத்திராமல், சிறு சிறு கூறுகளாகப் பிரித்து அவை முடிந்தவுடன் அவ்வப் போது நடைமுறைப்படுத்திவிடும் முறை. ஜேம்ஸ் மார்ட்டின் என்பவர் முதன்முதலில் இம்முறையை உருவாக்கிச்செயல்படுத்திக்காட்டினார். கேஸ் கருவிகள் (CASE Tools) மற்றும் காட்சிமுறை நிரலாக்கச் (Visual Programming) சூழல்களில் இவ்வழிமுறை பயன்படுத்தப்பட்டது. கேஸ் என்பது கணினி உதவியிலான மென்பொருள் படைப்பாக்கம் (Computer Aided Software Engineering) என்பதன் சுருக்கம்.

radio : வானொலி

radio clock , வானலைக் கடிகாரம் : நிகழ்நேர சமிக்கைகளுடன் கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ் வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப் படுகின்றன. பிணைய நேர நெறி (pop (Network Time Protocol)யின் அடிப்படையில், புரவன் கணினியின்,(Host) வன்பொருள் கடிகார நேரத்தை, உலகப் பொதுநேர ஆயக்கூறு வடிவமைப்புடன் ஒத்திசையும் படி செய்ய இவை பயன்படுகின்றன.

radio frequency : வானொலி அலைவரிசை : சுருக்கமாக ஆர்எஃப் எனப் படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோஹெர்ட்ஸ் - 300 கிகாஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி.மீ - 0.3 மி.மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை

radio station guide : வானொலி நிலைய வழிகாட்டி.

RADIUS : ரேடியஸ் : தொலைபேசிப் பயனாளர் தொலைதூர சான்றுறுதி சேவை நெறிமுறை எனப் பொருள்படும் Remote Authentication Dial-in User Service Protocol என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பயனாளர் ஒரு பிணைய வழங்கனில் இணைத்துக்கொள்ள முயலும் போது, அவர் அனுமதி பெற்ற பயனாளர் தானா என்கிற சான்றுறுதியும், அணுகல் அனுமதியையும் வழங்குவதற்கெனத் தனியாக ஒரு சான்றுறுதி வழங்கல் (Authentication Server) இருக்கும். இணையத்திற்கென முன் மொழியப்பட்ட நெறி முறை இது.

radix-minus-1 complement : அடியெண்-கழித்தல்-1 நிரப்பெண்; அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் : குறிப்பிட்ட இலக்கங்கள், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இடம்பெறும் எண் முறையில், இயலக்கூடிய அதிகப்பட்ச எண்மதிப்பிலிருந்து, ஓர் எண்ணைக்