பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RAM cache

374

random access file


பெழுத்துக் குறும்பெயர். தகவல் சேமிப்பு வழிமுறைகளுள் ஒன்று. தகவலோடு சேர்த்து, பிழை திருத்தத்துக்கான தகவல்களையும் (சமன் பிட், ஹேமிங் குறிமுறை போன்றது) இணைத்து இரண்டு அல்லது மேற்பட்ட நிலைவட்டுகளில் பகிர்ந்து சேமிப்பதன் மூலம் செயல்திறனும், நம்பகத்தன்மையும் கூடுகிறது. கோவை மேலாண்மை மென் பொருள், நிலைவட்டின் கோவையை கவனித்துக் கொள்கிறது. வட்டுக் கட்டுப்படுத்தி, பிழை திருத்தத்தைக் கவனித்துக் கொள்கிறது. ரெய்டு, பெரும்பாலும் பிணைய வழங்கனில் பயன்படுத்தப்படுகிறது. அணுகல் வேகம், நம்பகத்தன்மை, செலவு இவற்றின் அடிப்படையில், ரெய்டு பல தரங்களில் செயல்படுத்தப் படுகிறது.

RAM cache : ரேம் இடைமாற்றகம் : ரேம் (RAM) நினைவகத்திலிருந்து தகவலை எடுக்கவும் பதியவும் கணினியால் பயன்படுத்தப்படும் இடைமாற்று நினைவகம் (cache memory). கணினியால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற தகவல் கூறுகள், இடைமாற்று நினைவகத் தில் இருத்தி வைக்கப்படுகின்றன. வட்டுப்போன்ற துணைநிலைச் சேமிப்பகத்தில் தகவலை அணுகுவதைவிட மிகவேகமாகஅணுகமுடியும்.

RAM card , ரேம் அட்டை : ரேம் நினைவகச் சிப்புகளும் நினைவக முகவரிகளை குறிவிலக்கம் (decode) செய்வதற்கான இடைமுகத் தருக்கப் பகுதியும் பொருத்தப்பட்ட ஒரு கூடுதல் வசதி மின்சுற்றுப் பலகை.

RAM compression : ரேம் இறுக்கம்: விண்டோஸ் 3.x இயக்க முறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம். ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறுக்கிச் சுருக்குவதன் மூலம், மெய் நிகர் நினைவகத்தில் (Virtual Memoryபெரும்பாலும் நிலைவட்டு) எழுதுதல்/படித்தல் தேவை குறைகிறது. எனவே கணினியின் வேகம் அதிகரிக்கும். (ஏனெனில், ரேம் நினைவகத்தைவிட வட்டில் உள்ள மெய்நிகர் நினைவகத்தைக் கையாள்வது மெதுவாக நடைபெறும் செயலாகும்). ரேம் சிப்புகளின் விலை குறைந்ததாலும், நினைவகத்தை மிகவும் திறமையாகக் கையாளும் விண்டோஸ் 95/என்டி வருகையாலும் ரேம் இறுக்கம் என்னும் நுட்பத்திற்குத் தேவையில்லாமல் போய்விட்டது. ஒருசில பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு.

RAMDAC : ரேம்டாக் குறிப்பின்றி அணுகு நினைவக இலக்கமுறையிலிருந்து தொடர்முறைக்கு மாற்றி - என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விஜிஏ மற்றும் சில எஸ்.விஜிஏ ஒளிக்காட்சி தகவி அட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிப்பு. ஒரு படப்புள்ளியின் இலக்கமுறைத் தகவலை திரையகம் திரையிடத்தகுந்த முறையில் தொடர் முறைத் (Analog) தகவலாய் மாற்றித் தரும், பொதுவாக ரேம்டாக் சிப்பு ஒளிக்காட்சிப் படங்களின் கூர்மையை மேம்படுத்தும்.

random access file : குறிப்பிலா அணுகுகோப்பு: நேரடி அணுகு கோப்பு.