பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

random access storage

375

rasterization


random access storage : குறிப்பிலா அணுகு சேமிப்பகம்; நேரடி அணுகு தேக்ககம்.

random noise : ஒழுங்கிலா இரைச்சல்; குறிப்பிலா இரைச்சல் : வீச்சுக்கும் நேரத்துக்கும் (Amplitude and Time) தொடர்பில்லா சமிக்கை. ஒழுங்கு வரிசையில்லாப் பல அலை வரிசைகளின் கலப்பு. குறிப்பிட்ட தோரணி கொண்டதாகவோ, முன்னறியக் கூடியதாகவோ இருக்காது.

random number generation : குறிப்பிலா எண் உருவாக்கம் : முன்தீர்மானிக்க முடியாத எண் வரிசையாக உருவாக்குதல். ஒருநேரத்தில் பட்டியலில் எந்த இடநிலையில் எந்த எண் வரும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. உண்மையில் பார்த்தால் குறிப்பிலா எண் உருவாக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. கணினியில் பயன்படுத்தப்படும் செயலாக்க முறையை உண்மையில் போலியான குறிப்பிலா எண் உரு வாக்கம் என்றுதான் கூற வேண்டும்.

rapid application development (RAD) tools : அதிவிரைவுப் பயன்பாடு உருவாக்க கருவிகள்.

rapid execution engine: அதிவிரைவு இயக்கப் பொறி.

range of applicability : பயன்பாட்டுத் தன்மை வீச்சு.

RARP : ரார்ப்; ஆர்ஆர்ப் : முன்பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Rèverse Address Resolution Protocol group @girl—fficit தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி நெறிமுறையில் ஒரு குறும்பரப்புப் பிணையம் இணையத்தில் இணைக்கப்படும்போது, ஒரு கணுவின் ஐபி முகவரியை, வன் பொருள் முகவரிகளைக் கொண்டே கணக்கிட்டுவிடும். ஆர்ஆர்ப், ஐபீ முகவரியை நேரடியாகக் கண்டறியவே பயன்படுகிறது.

raste : ராஸ்டர்; கிடைவரி : ஓர் ஒளிக் காட்சித் தோற்றத்தில் செவ்வகத் தோரணி கொண்ட வரிகள். கிடைமட்ட வரிகளை வருடிப் பெறும் வரை கலை தகவல் என்பதால் ராஸ்டர் வருடல் என்று பெயர் உண்டாயிற்று.

raster image : ராஸ்டர் படிமம்: கிடைவரிப் படிமம் : ஒளி-இருள் அல்லது பல்வேறுபட்ட வண்ணப் படப் புள்ளிகள் செவ்வகக் கோவையில் (Rectangular Array)அமைத்து உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப் படிமம்.

raster image processor : ராஸ்டர் படிமச் செயலி : நெறிய வரைகலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரைகலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப் படதட்டச்சு, மின் நிலைம வரைவுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவணத்தின் ஒரு பக்கத்தி லுள்ள ஒவ்வொரு படப்புள்ளி (pixel) யின், ஒளிர்மை, நிறம் ஆகியவற்றின் மதிப்புகளைக் கணக்கிட்டு, நெறிய வரைகலைப் படிமத்தை உள்ளவாறே மீட்டுருவாக்கும் திறன் இச் சாதனத்துக்கு உண்டு.

rasterization : ராஸ்டர் மயமாக்கம்; ராஸ்டர் முறையாக்கம் நெறிய வரைகலையை (Vector Graphics - புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப்படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள்