பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Apple Newton

35

application


களில் (ஆப்பிள் எஸ்இ, மெக்கின் டோஷ் II, ஆப்பிள் Ilஜிஎஸ்) பயன்படுத்தப்படும், 105 விசைகள் உள்ள விசைப்பலகை. ஐபிஎம் மற்றும் அதன் ஒத்தியல் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட விசைப்பலகையில் இருப்பது போன்று ஆப்பிள் விசைப்பலகையில் இல்லையே என்ற குறையை நிறைவு செய்ய, இந்த விசைப்பலகையில் முதன்முதலாக செயல்விசைகள் (function keys) சேர்க்கப்பட்டன. புதிய விசைகளையும் சேர்த்து, வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்ட இந்த விசைப் பலகை ஐபிஎம்மின் மேம்படுத்தப்பட்ட விசைப் பலகையைப் பெரிதும் ஒத்திருந்தது.

Apple Newton : ஆப்பிள் நியூட்டன் ,ஆப்பிள் நிறுவனத்தின் கையகக்கணினி.

Apple Script :ஆப்பிள் ஸ்கிரிப்ட் : சிஸ்டம் 7 இயக்க முறைமையில் செயல்படும் மெக்கின்டோஷ் கணினிகளில் கட்டளைகளை நிறைவேற்றவும், தானியக்கச் செயல்பாடுகளுக்கும் பயன்படும் ஒரு வடிவாக்க மொழி.

Apple Talk : ஆப்பிள்டாக்: ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும்பரப்புப் பிணையம் (Local Area Network).இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்புகொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆப்பிள் அல்லாத கணினிகள் ஆப்பிள்டாக்கின் மென்பொருளையும், வன்பொருளையும் கொண்டிருக்க வேண்டும். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியை ஒத்த நெறிமுறைகளையே இந்தப் பிணையம் பின்பற்றுகிறது. சட்டம் (frame) எனப்படும் பொட்டலங்களில் தகவல் பரிமாற்றம் செய்கிறது. ஒர் ஆப்பிள்டாக் பிணையம் இன்னொரு ஆப்பிள்டாக் பிணையத்துடன் இணைவி (bridge) மூலமாகவும், வேறுபட்ட பிணையங்களுடன் நுழைவி (gateway) மூலமாகவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

application பயன்பாடு:பயன்பாட்டுத் தொகுப்பு : கணினியில் சொல்செயலி,கணக்குவழக்கு,கையிருப்பு மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட பணியை நிறை