பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



reference type

382

refrigerator


reference type : குறிப்பு இனம்.

reference variables : பொருந்து மாறிகள்; குறிப்பு மாறிகள்.

reflective liquid-crystal display : பிரதிபலிக்கும் நீர்மப் - படிகக் காட்சி : நீர்மப் படிகக் காட்சியில் ஒரு வகை. படிக்கும் தெளிவை மிகுவிக்க ஓர அல்லது பின்புற ஒளியை பயன்படுத்தாமல், பிரதிபலிக்கும் உள்ளுறை ஒளியைப் பயன்படுத்தும் முறை. ஆனால் இத்தகு காட்சித் திரையை வெளிச்சத்தில் பார்த்தால் தெளிவாக இராது. எனவே அறைக்கு வெளியே திறந்தவெளியில் பயன்படுத்த முடியாது.

reflective routing: பிரதிபலிப்பு திசைவிப்பு : விரிபரப்புப் பிணையங்களில், பிணைய வழங்கன் கணினியின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தகவல்கள் பகிர்ந்தளிக்கப்படுவ துண்டு. ஒரு பிரதிபலிப்பி நிரல் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.

reflector : பிரதிபலிப்பி ; ஒரு பயனா ளரிடமிருந்து சமிக்கை கிடைக்கப் பெற்றவுடன் பல பயனாளர்களுக்கு செய்தியை அனுப்பிவைக்கும் ஒரு நிரல். பொதுவகை பிரதிபலிப்பி களுள் மின்னஞ்சல் பிரதிபலிப்பி ஒன்று. ஒரு மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றவுடன் தன்னிடமுள்ள பட்டிய லிலுள்ள அனைத்து முகவரிகளுக்கும் அந்த அஞ்சலை திருப்பி அனுப்பிவைக்கும்.

refresh : புதுப்பித்தல் : 1. கணினித் திரையிலுள்ள படிமம் மாறாவிட்டாலும், படக்குழலில் பாஸ்பரஸ் கதிரியக்கப்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் திரைக்காட்சி புதுப்பிக்கப்படவேண்டும். 2. இயங்குநிலை நினைவகச் (Dynamic Memory-DRAM) சிப்புகளில் இருத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் இழக்கப் படாமல் இருக்க அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும். நினைவகப் பலகையிலுள்ள ஒரு மின்சுற்று தானாகவே இந்தப் பணியை கூறினை செய்து முடிக்கும்.

refreshable : புதுப்பிக்கத்தகு : ஒரு நிரல் செயல்படுத்தப்படும்போது, அந்நிரலின் செயலாக்கத்தைப் பாதிக்காமல், அந்நிரல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகவலுக்குப் பாதிப்பு ஏற்படாமல், நினைவகத்தில் தங்கியுள்ள அந்நிரலின் கூறு ஒன்றினை வேறொன்றால் பதிலீடு செய்யும் வசதி.

refresh cycle : புதுப்பிப்புச் சுழற்சி : இயங்குநிலை குறிப்பின்றி அணுகு நினைவகச் (DRAM) சில்லுகளில் 1 என்னும் இருமத் தகவல் பதியப் பட்டுள்ள நினைவக இருப்பிடங் களில் சேமிக்கப்பட்டுள்ள மின்னூட்டம் இழக்கப்படாமல் தக்கவைக்க அதனை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். நினைவகக் கட்டுப் படுத்தி மின்சுற்று, இதற்கான மின் துடிப்பைக் குறிப்பிட்ட கால இடை வெளியில் வழங்குகிறது. ஒவ்வொரு மின்துடிப்பும் ஒரு புதுப்பிப்புச் சுழற்சி ஆகும். இத்தகைய புதுப்பித்தல் இல்லையெனில் இயங்கு நிலைக் குறைகடத்தி ரேம்கள் தன்னிடமுள்ள தகவலை இழந்து விடுகின்றன, கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தும் போதும், மின்சாரம் துண்டிக்கப் படும்போதும் பதியப்பட்ட தகவல் இழக்கப்படுவதைப்போல.

refresenrate : புதுப்பிப்பு வீதம்.

refrigerator : குளிர்பதனப் பெட்டி