பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



region fill

383

relational algebra



region till : பரப்பை நிரப்பல் ; கணினி வரைகலையில், திரையில் உரு வாக்கப்பட்ட ஒரு வரையறுத்த பரப்பை (வட்டம், சதுரம், செவ்வகம் போன்றவை) தேர்ந்தெடுத்த நிறம், தோரணி அல்லது பிற பண்புக் கூறுகளால் நிரப்பும் நுட்பம்.

regional communities : வட்டாரச் சமூகக் குழுக்கள்.

regional settings : வட்டார அமைப்புகள்.

register, access control : அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்.

register, address : முகவரிப் பதிவகம்.

register, arithmetic : கணக்கீட்டுப்பதிவகம்.

register, check : சரிபார்ப்புப் பதிவகம்.

register, circulating : சுற்றுப் பதிவகம்.

register, console display : பணியகக் காட்சிப் பதிவகம்.

register, current instruction : நடப்பு ஆணைப் பதிவகம்.

register, error : பிழைப் பதிவகம்,

register, index : சுட்டுவரிசைப் பதிவகம்.

register, shift : பெயர்வுப் பதிவகம்.

register, storage : சேமிப்புப் பதிவகம்.

registry : பதிவேடு; பதிவகம் : விண்டோஸ் 95/98/என்டி இயக்க முறைமைகளில் பயன்படுத்தப்படும் மையப் படிநிலை தரவுத் தளம். ஒன்று அல்லது மேற்பட்ட பயனாளர்கள், பயன்பாடுகள், வன்பொருள் சாதனங்களுக்காக கணினியை தகவமைக்கத் தேவையான தகவல்களைச் சேமித்து வைக்க இது பயன் படுத்தப்படுகிறது. கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, கோப்புறை மற்றும் சின்னங்களின் பண்புகளில், கணினியில் இணைக்கப்பட்ட வன் பொருள்களில், பயனாளர்களின் விருப்பத்தேர்வுகளில், நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் தகவமைவுகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. விண்டோஸ் 3.x-இல் இருந்த .INI கோப்புக்கும், எம்எஸ் டாஸில் இருந்த autoexec.bat, config.sys கோப்புகளுக்கும் மாற்றாக இது விளங்குகிறது. விண்டோஸ் 95/ 98 மற்றும் விண்டோஸ் என்டி பதிவேடுகள் ஒன்றுபோல இருந்தாலும் வட்டில் பதியப்பட்டுள்ள முறையில் வேறுபடுகின்றன.

registry editor : பதிவேடு திருத்தி : விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் பதிவேட்டில் உள்ள விவரங்களை பயனாளர் விரும்பியவாறு திருத்த மாற்ற உதவும் ஒரு பயன்பாடு. regedit என்றும் கட்டளை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

reinstall : மறுநிறுவல்.

reject : ஒதுக்கு .

relational algebra : உறவுநிலை இயற்கணிதம் : தகவல் தளங்களில் உள்ள அட்டவணைகளைக் கையாள்வதற்கான விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பு. கீழ்க்காணும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: select, project, product, union, intersect, difference, join (or inner join), divide. உறவுநிலைத் தரவுத் தளங்களில், ஏற்கெனவே இருக்கும் அட்ட வணைகளின் அடிப்