பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



relational calculus

384

relative pointing device


படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க உறவுநிலை இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.

relational calculus : உறவுநிலை நுண்கணிதம் : தரவுத் தள மேலாண் மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல்முறை சாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு: 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு நுண்கணிதங்களும் தமக்குள்ளே ஒரே மாதிரியானவை. உறவுநிலை இயற் கணிதத்துடன் உடன்பாடு கொண்டவை. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, இருக்கின்ற அட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க முடியும்.

relational model : உறவுநிலை மாதிரியம் : தகவல்களை அட்டவணைகளில் சேமித்து வைக்கும் ஒரு தரவுத் தள மாதிரியம். அட்டவணையை (table), உறவு (relation) என்று அழைப்பதுண்டு. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பெரும் பாலான தரவுத் தள மேலாண்மை அமைப்புகளில் இந்த வகை மாதிரியமே பின்பற்றப்படுகிறது.

relational operation : ஒப்பீட்டுச் செயல்பாடு.

relationships : உறவு முறைகள்.

relative address : ஒப்பீட்டு முகவரி; சார்பு முகவரி .

relative cell reference : ஒப்பிட்டு சிற்றம் மேற்கோள்; சார்புக் கலக் குறிப்பு.

relative path : சார்புப் பாதை : டாஸ், யூனிக்ஸ் இயக்க முறைமைகளில் பயன்படும் சொற்றொடர். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கோப்பகத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் கோப்பகப் பாதை. பயனாளர், ஒரு கோப்பு தொடர்பான கட்டளையைக் கொடுக்கும்போது, முழுப்பாதையும் கொடுக்கவில்லை எனில், நடப்புக் கோப்பகம் சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். C:\WORK> DEL C:\TC\PRGI TEST.C என்ற கட்டளையில் TEST.C என்னும் கோப்பு இருக்கும் முழுப் பாதையும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், C:\WORK> DEL TEST.C என்று கட்டளை அமைப்பின் TEST.C என்னும் கோப்பு WORK கோப் பகத்தில் உள்ளது எனப் பொருள் படும். C:\WORK> DEL PRG\TEST.C என்று கட்டளை அமைத்தால், WORK-லிலுள்ள PRG என்னும் உள் கோப்பகத்திலுள்ள TEST.C என்று பொருள்படும். C:\WORK> DEL TC\PRG\TEST.C என்ற கட்டளையும் C:\WOR\TC\PRG\TEST.C என்ற கோப்பினையே குறிக்கும்.

relative pointing device : ஒப்புநிலை சுட்டுச் சாதனம் : சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து அமைவதில்லை . சாதனத்தின் நகர்வு களைப் பொறுத்தே அமைகிறது. எடுத்துக்காட்டாக, சுட்டியைத் திண்டின்மீது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தூக்கி வைத்தோமானால் திரையில் காட்டி நகர்வதில்லை . ஆனால், திண்டின் மீது உராயுமாறு சுட்டியைச் சிறிதளவு நகர்த்தினால் போதும். திரையிலுள்ள