பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



relative URL

385

relocatable address


காட்டியும் நகரும். இவ்வகைச் சுட்டுச் சாதனங்கள், முற்றுநிலை (Absoluts) சுட்டுச் சாதனங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக வரைகலைப் பலகை (Graphics Tablets) யில் குறிப்பிட்ட பரப்புக்குள் சுட்டுச் சாதனம் எந்த இடத்தில் இருக் கிறதோ அதற்கேற்ப திரையிலுள்ள காட்டியின் இருப்பிடமும் அமைகிறது.

relative URL : சார்பு யுஆர்எல் : சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரை யும், வகைப்பெயரையும் மட்டுமே குறிப்பிடும் முறை. சிலவேளைகளில் கோப்பகப் பாதையில் ஒருபகுதி கொடுக்கப்படலாம். நடப்புக் கோப்பின் பாதையிலிருந்து கொடுக்கப் பட்ட கோப்பின் பாதை சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். www.msn.com\aspinet.html என்ற கோப்பினைப் பார்வையிடும் போது, www.msn.comiaspicsharp\ref. html எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, csharp\ref.html என்று மட்டும் குறிப்பிடுவது சார்பு யுஆர்எல் எனப்படும்.

relay : அஞ்சல்,

relevancy ranking : தேவைக்கேற்ப தரப்படுத்தம்.

release1 : வெளியீடு : 1. மென் பொருள்களின் பதிப்பு தொடர்பான சொல், மென்பொருள்கள் பதிப்பு எண் இடப்பட்டு வெளியிடப்படுகின்றன. விண்ஸிப் 7.0 {Version No) விண்ஸிப் 8.0 என்றெல்லாம் குறிப்பிடுவர். மிக அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட பதிப்போடு தொடர்புடைய வெளியீட்டை வரிசையெண்ணிட்டு அழைப்ப துண்டு . Open Server System v Release 5.0, Lotus 1-2-3 Release 2.2 இவ்வாறு சில நிறுவனங்கள் மென் பொருளின் பெயரோடு சேர்த்தே வெளியீட்டு எண்ணையும் குறிப் பிடுவதுண்டு. 2. பொது வினியோகத் தில் கிடைக்கின்ற ஒரு மென் பொருள் தயாரிப்பின் பதிப்பு எண்.

release2 : விடுவி; வெளியிடு; வெளியீடு : 1. நினைவகத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு புறச்சாதனத்தை அல்லது பிற வளம் ஒன்றினை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து இயக்க முறைமையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தல். 2. ஒரு வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தல்.

reload : மறுஏற்றம் : 1. ஒரு நிரலின் செயல்பாட்டில் எதிர்பாராத இடை யூறு நேரும்போதோ, கணினிச் செயல்பாடு திடீரென நிலைகுலை யும்போதோ, சேமிப்புச் சாதனத்திலிருந்து அந்நிரலை நினைவகத்தில் மீண்டும் ஏற்றுதல். 2. இணைய உலாவியில் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வலைப் பக்கத்தின் புதிய நகலைப் பெறுதல். சில வேளைகளில் இதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவலைப் பெற முடியும். (எ-டு) நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஓட்ட விவரம் அடங்கிய பக்கத்தைப் பார்வையிடல். ஒவ்வொரு மறு ஏற்றத்திலும் மிக அண்மைய ஒட்ட விவரம் கிடைக்கும்.

relocatable address : இடம்பெயர்தகு முகவரி,