பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



representation

388

resistance


representation : உருவகிப்பு.

representation, binary : இரும உருவகிப்பு,

representation, binary coded decimal: இருமக் குறிமுறை பதின்ம உருவகிப்பு.

representation, data : தரவு உருவகிப்பு

representation, fixcal point : நிலைப் புள்ளி உருவகிப்பு.

representation, floating point : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

representation, number : எண் உருவகிப்பு.

request for discussion : விவாதத் துக்கான கோரிக்கை : ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் முன்பாக அதற்குரிய விவாதத்துக்கு முறைப் படியான பரிந்துரையை முன்வைப்பது. குறிப்பாக யூஸ்நெட் படி நிலையில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதிக்க வைக்கப்படும் கோரிக்கை. இதுவே முதற்கட்ட நடவடிக்கை. இறுதியில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும்.

required : கட்டாயத் தேவை. எம்எஸ் அக்செஸில் அட்டவணையில் ஒரு புலத்துக்கான பண்புக் கூறுகளுள் ஒன்று.

Research Libraries Information Network : ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம் : ஆராய்ச்சி நூலகங்களின் குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய, இணைய நிகழ்நிலைத் தொகுப்பு, பெரும்பாலும் அமெ ரிக்க நாட்டிலுள்ள மிகப்பெரும் ஆராய்ச்சி நூலகங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.

research network : ஆய்வுப் பிணையம்

reserve : ஒதுக்கு; ஒதுக்கீடு ; ஒரு குறிப்பிட்ட புறச்சாதனத்தின் செயல்படு பரப்புக்கென தொடர்ச்சியான வட்டுப் பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கான கட்டளை. இலக்கமுறை ஒளிக்காட்சிச் சாதனங்கள் இக்கட்டளையைப் புரிந்து கொள்கின்றன.

reserved character : ஒதுக்கப்பட்ட குறியீடு; சிறப்புக் குறியீடு: விசைப் பலகையிலுள்ள சில குறியீடுகளுக்கு நிரல்களில் சிறப்புப் பொருள் உள்ளன. எனவே, அவற்றைக் கோப்பு, ஆவணம், பயனாளர் உருவாக்கும் ஏனைய செயல்கூறுகள், குறுமம் (Macro) ஆகியவற்றின் பெயர்களில் அக்குறியீடுகளைப் பயன்படுத்த முடியாது. பொதுவாக, நட்சத்திரக் குறி (*), முன்சாய்வு (/), பின்சாய்வு (1) , வினாக்குறி (?), செங்குத்துக் கோடு (1) ஆகியவை ஒதுக்கப்பட்ட குறியீடுகளில் அடக்கம்.

reset, cycle : மீட்பியக்கு சுழற்சி.

reset mode : மீளமைவுப் பாங்கு.

resident portion : நிலையான பகுதி; நினைவகத்திடல் நின்று இயங்கும் பகுதி.

resistance : தடை; மின்தடை; மின் தடுப்பி: மின்னோட்டத்தை தடுக்கும் திறன். மீக் கடத்திகளைத் தவிர பிற மின்கடத்திகளில் குறைந்த அளவோ, அதிக அளவோ மின்தடைப் பண் புள்ளது. குறைந்த மின்தடையுள்ள உலோகங்கள் மின்கடத்தும் திறன் மிக்கவையாய் உள்ளன. எனவே இவை கடத்திகள் (conductors) என அழைக்கப்படுகின்றன. கண்ணாடி, ரப்பர் போன்றவை அதிக மின்தடை உள்ளவை. இவை மிகக்குறைவான மின்சாரத்தைக் கடத்துகின்றன. எனவே இவை கடத்தாப்