பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RFC

391

RISC


Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக்கணினிகள்(Mainframes) மற்றும் ஒஎஸ்/2 பதிப்பு 2.0-லும் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு நிரலாக்க மொழி. இம்மொழி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்குகிறது. இயக்கமுறைமைக் கட்டளைகளையும் செயல்படுத்தும்.

RFC :ஆர்எஃப்சி : மதிப்புரைக்கான கோரிக்கை எனப் பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தர வரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் - இவற்றில் ஒன்றுபற்றி பிற பார்வையாளர்கள், ஆர்வலர்களின் கருத்துரைகளைக் கேட்டு இணையத்தில் வெளியிடப்படும் ஒர் ஆவணம். ஐஏபி-யின் கட்டுப்பாட்டில் இவை வெளியிடப்படுகின்றன. விவாதங்களுக்குப் பிறகு இவையே இறுதித் தர வரையறையாக ஆகிவிடுகின்றன. இன்டர்நிக் போன்றவற்றின் அமைப்புகளிடமிருந்து ஏராளமான ஆர்எஃப்சிக்களை பெற முடியும்.

RFI: ஆர்எஃப்ஐ : வானலை அலை வரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற மின் சுற்றுகளில் உருவாகும் மின்காந்த கதிர்வீச்சினால் ஏற்படும் இரைச்சலைக் குறிக்கிறது.

RF shielding : ஆர்எஃப் காப்புறை : வானலை வரிசை ஊடுருவாமல் தடுப்பதற்குப் பயன்படும் கட்டமைப்பு. பெரும்பாலும் உலோகத் தகடு அல்லது உலோக மேற்பூச்சினால் அமைந்திருக்கும்.

RGB monitor : ஆர்ஜிபி திரையகம் : சிவப்பு,பச்சை,நீலம் ஆகிய அடிப்படை நிறங்களுக்கான சமிக்கைகளை தனித்தனித் தடங்களில் பெறுகின்ற ஒரு வண்ணத் திரையகம். மேற்கண்ட மூன்று நிறங்களுக்கான நிலை அளவுகளை ஒற்றைத் தடத்தில் பெறுகின்றது. கலப்பு இனத் திரையகங்களைவிடப் பொதுவாக தெளிவான, தூய படிமங்களை உருவாக்கும் திறன்படைத்தவை.

right : வலம் /வல .

right, access :அணுக்க உரிமை .

right arrow :வலது அம்புக்குறி .

right click :வலச்சொடுக்கு.

right shift : வல நகர்வு;வலது பெயர்வு.

ring connected : வளைய இணைப்பு .

ring network : வளைப் பிணையம்.

ring/loop: வளைய/மடக்கு.

ripple sort : அதிர்வலை வரிசையாக்கம்.

RISC : ரிஸ்க் : சுருக்க ஆணைத்தொகுதி கணிப்பணி என்று பொருள் படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எளிய ஆணைகளின் அடிப்படையில் அதி வேகமாய் திறன்மிக்கதாய் செயல்படக்கூடிய ஒரு நுண்செயலி வடிவமைப்பு. ஒவ்வோர் ஆணையையும் ஒரு கடிகாரச் சுழற்சியிலேயே அதிவேகமாய் செயல்படுத்துவதை