பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RTS

396

run-length limited encoding



Flaming (or Friendly) manual என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஓர் இணையச் செய்திக் குழுவில் அல்லது விற்பனைப் பொருள் அறிமுக கருத்தரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் ஒரு வழக்கமான பதில், குறிப்பேட்டில் அக்கேள்விக் கான பதில் விளக்கமாகத் தரப் பட்டுள்ளது என்பது பொருள்.

RTS : ஆர்டீ எஸ் : அனுப்பிவைக்கக் கோரிக்கை என்று பொருள்படும் Request To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தகவலை அனுப்பிவைக்க அனுமதி கேட்டு, இணக்கிக்குக் கணினி அனுப்பும் ஒரு சமிக்கை. பொதுவாக நேரியல் (serial) தகவல் தொடர்பில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் 4-வது பின்னில் அனுப்பப்படும் வன் பொருள் சமிக்கையே ஆர்டீ எஸ் எனப்படுகிறது.

.ru : .ஆர்யு : ஓர் இணைய தள முகவரி ரஷ்ய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

rudder control : சுக்கான் இயக்கு விசை : விமானப் பறப்புப் பாவிப்பு நிரல்களில், பயனாளர் ஒருவர் சுக்கான் அசைவுகளை உள்ளீடு செய் வதற்கு வசதியாக அமைந்துள்ள, ஓர் இணை (pair) மிதிகட்டைகள் அடங்கிய ஒரு சாதனம். இது பெரும் பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) யுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.

rule based education : விதிவழிக் கல்வி.

ruler : அடிக்கோல், வரைகோல் : சொல் செயலி போன்ற பயன்பாட்டு நிரல்களில் திரையில் தோற்றமளிக் கின்ற, அங்குலம் அல்லது சென்டி மீட்டர்களில் (அல்லது பிற அலகு களில் ) அளவு குறிக்கப்பட்ட வரை கோல். இது பெரும்பாலும் ஒரு வரி யின் நீளம், தத்தல் (tab) அமைவுகள், பத்தி உள்தள்ளிடம் (paragraph indent) தொடங்கிடங்களைத் தீர்மானிக்க உதவும். விசைப்பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தி தத்தல் நிறுத்தங்களை (tab stops) இதன்மீது உருவாக்க, நீக்க, மாற்றியமைக்க முடியும்.

run database query : தரவுத்தள வினவல் இயக்கு

rur macro : குறுமம் இயக்கு.

run-length limited encoding : இயக்க நீள வரம்புறு குறியாக்கம் : சுருக்க மாக ஆர்எல்எல் குறியாக்கம் எனப் படுகிறது. மிகவிரைவான, திறன் மிகுந்த தகவல் சேமிப்பு வழிமுறை. குறிப்பாக வட்டுகளில் அதிலும் குறிப்பாக நிலைவட்டுகளில் தகவலைச் சேமிக்கும் முறை. தகவலின் ஒவ்வொரு துண்மியும் (பிட்) உள்ளபடியே சேமிக்கப்படுவ தில்லை. குறிப்பிட்ட தோரணியில் அமைந்த துண்மி (பிட்)கள் குறி முறையாக மாற்றப்பட்டு பதியப்படு கின்றன. தொடர்ச்சியாக வரும் சுழி களின் (zeroes) எண்ணிக்கை அடிப் படையில் மின்புலம் தீர்மானிக்கப் படுகிறது. மிகக்குறைந்த மின்புல மாறுதல்களுடன் நிறைந்த அளவு தகவல் சேமிக்க முடிகிறது. பழைய முறைகளான எஃப்எம் (FM-Frequency Modulation) மற்றும் எம்எஃப்எம் (MFM - Modified Frequency Modulation) ஆகிய முறைகளில் இதே அளவு தகவலைச் சேமிக்க மிக அதிகமான இடம் தேவைப்படும்.