பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

running foot

397

RXD



running foot : ஓடும் அடி : சொல் செயலி ஆவணங்களில் ஒரு பக்கத்தின் அடி ஓரப்பகுதியில் பக்க எண், அத்தியாயப் பெயர், தேதி போன்றவை ஒன்று அல்லது பலவும் சேர்ந்து ஒரு வரியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் அமைவது.

run-time binding : இயக்கநேரப் பிணைப்பு : மாறி (Variable), சுட்டு (pointer) போன்ற ஓர் அடையாளங் காட்டி எதைச் சுட்டுகிறது என்பதை ஒரு நிரலை மொழிமாற்றும் நேரத் தில் (compile time) குறிக்காமல், நிரல் இயங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுதல். இதனை காலந்தாழ்ந்த பிணைப்பு (Late Binding) என்றும் கூறுவர். இயங்குநிலைப் பிணைப்பு (Dynamic Binding) என்றும் கூறலாம்.

run-time error : இயக்க நேரப் பிழை; ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2. தருக்கமுறைப் பிழை (Logical Error) : இப்பிழையை மொழிமாற்றியோ, கணினியோ கண்டுபிடித்துச் சொல்லாது. நிரல் முழுமையாக இயங்கும் ஆனால் பிழையான விடை கிடைக் கும். இதற்குக் காரணம் நிரலர் தருக்க முறையில் செய்த தவறாகும். 3. இயக்க நேரப் பிழை (run-time error); மொழிமாற்றி பிழை சொல்லாது. நிரல் முழுமையாக நிறைவேற்றப் படாது. இயக்க நேரச் சூழல் (Run Time Environment) அல்லது கணினி முறைமையால் பிழை சுட்டப்பட்டு நிரல் பாதியிலேயே நின்றுவிடும்.

run-time version : இயக்கநேரப் பதிப்பு; இயக்கநிலைப் பதிப்பு ; 1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொது வாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தகவல் தொகுதிகளுக்கும் சரியாகச் செயல்படும் வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படும் தொகுப்பு. 2. ஒரு முழுமையான மென்பொருள் தொகுப்பில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் தராமல், ஒருசில வசதிகளுடன் மட்டுமே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வெளியீடு.

run time exception : இயக்கநேர விதிவிலக்கு.

run web querry : வலை வினவல் இயக்கு,

.rw : ஆர்டபிள்யூ : ஓர் இணையதள முகவரி, ருவாண்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

RXD : ஆர்எக்ஸ்டி : தகவல்களை பெறுதல் (Receive Data) என்பதன் சுருக்கம். தகவல் பரிமாற்றத்தில் நேரியல் (serial) முறையில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனம் தகவலைப் பெறும் தடம். (எ-டு) இணக்கியிலிருந்து கணினிக் குச் செல்லும் தகவல், ஆர்எஸ் -232-சி இணைப்புகளில் மூன்றா வது பின்னில் பெறப்படுகிறது.