பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

saturated mode

399

scalar data type


பயன்பாட்டுத் தொகுப்புகள் குரலுணர்தல் மற்றும் உரையைப் பேச்சாக மாற்றல் போன்ற வசதிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

saturated mode : பூரிதப் பாங்கு; முற்றுநிலைப் பாங்கு : ஒரு நிலை மாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டியநிலை. இந்த நிலையில் உள்ளீட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அதிகரித்தாலும் வெளியீட்டு மின்னோட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

saturation : பூரிதம்; முற்றுநிலை; முழுநிறைவு : 1. ஒரு நிலைமாற்றுச் சாதனம் அல்லது பெருக்கியின் முழு கடத்து நிலை. இந்த முற்றுநிலையில், இவற்றின் ஊடே உச்சஅளவு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். இருதுருவ (bipolar) மற்றும் புல-விளைவு (field-effect) மின்மப் பெருக்கிகளைக் கொண்ட மின்சுற்றுகள் குறித்தே பெரும்பாலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 2. வண்ண வரைகலையிலும், அச்சுத் துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிறக் கலவையில் ஒரு குறிப்பிட்ட நிறத்தின் அளவு முற்றுநிலை பெற்றதாகக் குறிப்பிடுவர்.

Save/Save As : சேமி/எனச் சேமி.

Save as HTML : ஹெச்டிஎம்எல் ஆகச் சேமி.

Save as Type : வகையில் சேமி.

save record : ஏட்டைச் சேமி.

save results : விடைகளைச் சேமி.

save workspace : பணிவெளியைச் சேமி.

saving : சேமித்தல்.

.sb : .எஸ்பி : ஒர் இணைய தள முகவரி சாலமன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.sc : .எஸ்சி : ஒர் இணைய தள முகவரி செய்ச்செலீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

scalable parallel processing : அடையத்தக்க இணைநிலைச் செயலாக்கம்: பல்முனைச் செயலாக்கக் கட்டுமானத்தில் ஒருவகை. அதிகச் சிக்கலின்றி, செயல்பாட்டுத் திறனுக்குக் குறைவு நேராவண்ணம் கூடுதல் செயலிகளை இணைத்துக்கொள்ள முடியும்; கூடுதல் பயனாளர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

scalar : ஒற்றைமதிப்பு; அளவீடு: அளவுரு : ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தகவல் கட்டமைப்பு போல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறியை இது குறிக்கும். AB என்கிற ஒரு நெறியம், தொடக்கப்புள்ளி இறுதிப் புள்ளிக்கிடையே தொலைவு மற்றும் திசைப்போக்கு ஆகிய இரண்டு விவரங்களைக் கொண்டுள்ளது. ஆனால் AB என்று மட்டுமே குறித்தால், தொலைவை மட்டுமே குறிக்கும் ஒர் அளவீடு ஆகும்.

scalar data type: ஒற்றைமதிப்பு தரவு இனம் : இதைவிடப் பெரியது, அதை விடச் சிறியது என்று ஒப்பிட்டுச் சொல்லத்தக்க தொடர்மதிப்புகளைக் கொண்டிருக்கும் தரவு இனம். முழு எண் (Integer), எழுத்து (Character), பயனாளர் வரையறுக்கும்