பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/402

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
scenaries
screen pitch
400

எண்ணல் வகை (user defined enumerated type), பூலியன் ஆகிய தரவு இனங்களையும் இந்த வகையில் அடக்கலாம். மிதவைப்புள்ளி எண்களை இந்த வகையில் சேர்ப்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவற்றையும் வரிசைப்படுத்த முடியும், ஒப்பிடமுடியும் என்ற போதிலும் தோராயமாக்கல், இன மாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கருத்தில் கொண்டு புறக்கணிப்பாரும் உளர்.

scenaries : சூழ்நிலைக் காட்சிகள்.

schedule : கால அட்டவனை : குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிட்டவாறு செயல்படுத்த கணினியை நிரல்படுத்தல்.

schottky diode : ஸ்காட்கி இருமுனையம் : ஒரு திசையில் மட்டுமே மின்னோட்டத்தை அனுமதிக்கும் இருமுனையத்தில் ஒருவகை. இதில் ஒரு குறைகடத்தி அடுக்கும் ஒர் உலோக அடுக்கும் ஒன்றுசேர இணைக்கப்பட்டிருக்கும். அதி விரைவான நிலை மாற்று வேகமே (switching speed) இதன் சிறப்புக் கூறு.

sci.newsgroups: அறி.செய்திக் குழுக்கள்; சை.நியூஸ்குரூப்ஸ் : sci. (அறி வியல்) என்று தொடங்கும், யூஸ் நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

scrap : துண்டு; துணுக்கு : கணினித் தகவல் சேமிப்பில், வேறிடம் நகர்த் தவோ, நகலெடுக்கவோ, அழிக்கவோ குறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய ஒரு பயன்பாடு அல்லது ஒரு முறைமைக் கோப்பு.

scratch filter : அழித்தெழுது வடிகட்டி; கீறல் வடிகட்டி.

scratchpad RAM: அழித்தெழுது ரேம்; எழுதுபலகை ரேம்: ஒரு மையச் செயலகம் தற்காலிக தரவுச் சேமிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நினைவகம்.

screen angle : திரைக் கோணம் : நுண்பதிவுப் படத் திரைகளில் படப் புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும்.

screen, display : திரைக்காட்சி.

screen name : திரைப் பெயர் : அமெரிக்க ஆன்லைன் இணையச் சேவையின் பயனாளர் ஒருவர் அறியப்படும் பெயர். திரைப்பெயர் பயனாளரின் உண்மைப் பெயராகவும் இருக்கலாம்.

screen phone : திரைபேசி : தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஒர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித் திரை, ஒர் இலக்கமுறை தொலைநகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற புறச்சாதனங்களை இணைப்பதற்கான துறைகளையும் கொண்டிருக்கும். திரைபேசிகளை குரல்வழித் தகவல் தொடர்புக்குரிய தொலைபேசி போலவும், இணையம் மற்றும் பிற நிகழ்நிலைச் சேவைகளுக்கான கணினி முனையங்கள்போலவும் பயன்படுத்தலாம்.

screen pitch : திரை அடர்வு : கணினித் திரையகத்தில், திரைக் காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவினைக்