பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/403

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
scripting language
SCSI chain
401

கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத்தெளிவான காட்சி அமையும். எடுத்துக்காட்டாக .28 புள்ளி அடர்வுள்ள திரை .38 புள்ளி அடர்வுள்ள திரையைக்காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும்.

scripting language: உரைநிரல் மொழி : ஒரு குறிப்பிட்ட பயன்பாடு அல்லது செயல்கூறோடு தொடர்புடைய தனிச் சிறப்பான அல்லது வரம்புறு பணிகளை ஆற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒர் எளிய நிரலாக்க மொழி. பெரும்பாலும் வலைப் பக்கங்களை வடிவமைக்கும் ஹெச்டிஎம்எல் ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது.

scroll bar : உருள்பட்டை : சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடுக்கி, திரைக்காட்சியில் மேலும் கீழும், பக்கவாட்டிலும் நகர்ந்து, முழுத் தோற்றத்தையும் பார்வையிட முடியும். சுருள் பட்டைகளில் நான்கு பகுதிகள் உள்ளன. இருமுனைகளிலும் முக்கோணப் புள்ளிகள். அதன்மீது அழுத்தினால் ஒவ்வொரு வரியாக நகரலாம். பட்டையின்மீது ஒரு சிறிய பெட்டி. ஏதேனும் குறிப்பிட்ட இடத்துக்கு நகர்த்தலாம். பட்டையில் பெட்டியில்லா இடத்தில் சொடுக்கி பக்கம் பக்கமாய் நகரலாம்.

scroll bar arrows : உருள்பட்டை அம்புக் குறிகள்.

scroll lock key : சுருள் பூட்டு விசை : ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகைகளில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப்படுத்தும். சிலவேளைகளில் திரையின் உருள்தன்மையைத் தடுக்கும். மெக்கின்டோஷ் விசைப்பலகைகளில் மேல்வரிசையில் பணிவிசைகளுக்கு வலப்புறம் அமைந்திருக்கும். நவீனப் பயன்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த சுருள்பூட்டு விசையைப் புறக்கணிக்கின்றன.

SCSI : ஸ்கஸ்ஸி : சிறு கணினி அமைப்பு இடைமுகம் என்று பொருள்படும் Small Computer System Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (American National Standards Institute) அமைத்த எக்ஸ் 3டீ9.2 (X3T9.2) குழுவினர் வரையறுத்த அதிவேக இணைநிலை இடைமுகத்துக்கான தர வரையறை, நிலைவட்டுகள், அச்சுப் பொறிகள் மற்றும் பிற கணினிகள், குறும்பரப்புப் பிணையங்கள் போன்ற ஸ்கஸ்ஸி புறநிலைச் சாதனங்களை ஒரு நுண்கணினியில் இணைப்பதற்காக ஸ்கஸ்ஸி இடைமுகம் பயன்படுகிறது.

SCSI bus : ஸ்கஸ்ஸி பாட்டை : ஸ்கஸ்ஸி சாதனங்களிலிருந்து ஸ்கஸ்ஸி கட்டுப்படுத்திக்கு தகவல்களையும் கட்டுப்பாட்டு சமிக்கைகளையும் சுமந்துசெல்லும் ஒர் இணைநிலைப் பாட்டை.

SCSI chain : ஸ்கஸ்ஸி சங்கிலி : ஸ்கஸ்ஸிப் பாட்டையிலுள்ள சாதனங்கள். ஒவ்வொரு சாதனமும் [புரவன் தகவியும் (Host Adapter)