பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.sc

403

secondary service provider


யில் செயல்படும் பிணையங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் தகவல் பரப்பு நெறிமுறை. ஐஎஸ்ஓ உருவாக்கிய ஹெச்டிஎல்சி (HighLevel Data Link Control) நெறிமுறையைப் போன்றது. 2. முறைமை உருவாக்க செயல்படுகாலச் சுழற்சி (System Development Life Cycle) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளப்படும். ஒரு மென்பொருளின் தேவை, இயலும் நிலை, செலவு-பலன் ஆய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, உருவாக்கம், பரிசோதனை, நிறுவுகை, பராமரிப்பு, மதிப்பாய்வு போன்ற ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு நிலைகள் கொண்ட மென்பொருள் உருவாக்க வளர்ச்சிப்படிகளைக் குறிக்கிறது.

.sc : எஸ்இ : ஒர் இணைய தள முகவரி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

.sea : சீ; .எஸ்இஏ : ஸ்டஃப்பிட் (stuftit) என்னும் நிரல்மூலம் இறுக்கிச் சுருக்கிய மெக்கின்டோஷ் காப்பக - தானாகவே விரித்துக் கொள்ளும் கோப்பின் வகைப்பெயர் (file extension).

search algorithm : தேடு படிமுறைத் தருக்கம் : ஒரு குறிப்பிட்ட தகவல் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத்தருக்கம்.

search, binary : இருமத் தேடல்

search criteria : தேடு நிபந்தனை; தேடல் கட்டுப்பாட்டு விதி : ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள். (எ-டு) ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10,000 ரூபாய்க்கு மேல் சம்பளம்பெறும் பெண் அலுவலர்களின் பெயர், பணிப்பொறுப்புகளைக் கண்டறிதல். இங்கே "pay>10,000 And Sex is Female" என்பது தேடு நிபந்தனை.

search memory associative storage : தேடல் நினைவக தொடர்புறு சேமிப்பகம்.

search string : தேடு சரம் : தகவல் தளத்தில் தேடப்படுகின்ற ஓர் எழுத்துச்சரம். பெரும்பாலும் அது ஒர் உரைச்சரமாக இருக்கலாம்.

search time : தேடல் நேரம்.

search the web : இணையத்தில் தேடு.

searching word : தேடும் சொல்.

seat1 : இருக்கை1 : இருக்கை அடிப்படையிலான மென்பொருள் உரிமம் வழங்கும் முறையில் ஒரு பணி நிலையம் அல்லது ஒரு கணினியைக் குறிக்கிறது. அதாவது ஒரு கணினிக்கென வாங்கப்படும் ஒரு மென்பொருள் ஒரு கணினியில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

seat2 : இருக்கை2 : ஒரு செருகு வாய்க்குள் செருகப்படும் ஒற்றை உள்ளக நினைவகக் கூறு (Single inline Memory Module) ஒன்றாக அமர்ந்து கொள்வதுபோல, ஒரு கணினியில் அல்லது சேர்ந்திணைந்த கருவிகளில் ஒரு சிறிய வன்பொருள் உறுப்பை முழுதுமாகச் செருகி சரியாக நிலை நிறுத்துதல்.

second, micro : மைக்ரோ விநாடி.

secondary service provider : துணைநிலைச் சேவை வழங்குநர் :