பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

seek area

405

send statement


சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வுகளின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயனாளர்களின் பெயர்கள் அப்பதிகையில் பதிவாகியிருக்கும்.

seek area : தேடு பரப்பு; நாடும் பரப்பு.

segment, data : தரவுத் துண்டம்.

segmented addressing architecture : துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம் : இன்டெல் 80x86 செயலிகளில் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக-அணுகு நுட்பம். இக்கட்டுமானத்தில் நினைவகம் 64 கேபி கொண்ட துண்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. நினைவக இருப்பிடங்கள் 16 துண்மி (பிட்) கொண்ட முகவரியால் குறிக்கப்படுகின்றன. 32 துண்மி முகவரித் திட்டம் மூலம் 4 ஜிபி நினைவகத்திலுள்ள துண்டங்களைக் கையாள முடியும்.

segmented programme : கூறுபாட்டு நிரல்.

select all : அனைத்தும் தேர்ந்தெடு.

select all records : அனைத்து ஏடுகளையும் தேர்ந்தெடு.

selecting : தெரிவு செய்தல்.

selection control structure : தேர்வுக் கட்டுப்பாட்டமைப்பு.

selector : தெரிந்தெடுப்பி.

self-adapting : தன்-தகவமைத்தல் : கணினி அமைப்புகள், சாதனங்கள் அல்லது செயல்பாடுகள் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கேற்ப தம்முடைய செயல்பாட்டுத் தன்மைகளைத் தகவமைத்துக் கொள்ளும் திறன்.

self-checking digit : தானக சரிபார்க்கும் இலக்கம் : குறியாக்கத்தின்போது ஓர் எண்ணின் இறுதியில் சேர்க்கப்படும் இலக்கம், குறியாக்கத்தின் துல்லியத்தை உறுதிசெய்வது இதன் நோக்கம்.

self-modifying code : தானாக மாற்றியமைக்கும் குறிமுறை : பொதுவாக, ஒரு மொழிமாற்றி (compiler) அல்லது சிப்பு மொழிமாற்றியினால் (assembler) உருவாக்கப்படும் இலக்கு நிரல் குறிமுறை புதிய கட்டளைகளை, முகவரிகளை, தகவல்மதிப்புகளை ஏற்கெனவே இருக்கும் ஆணைத் தொகுப்பில் சேர்க்கும்போது தானாக மாற்றியமைத்துக்கொள்ளும்.

self-validating code : தானாக சரிபார்க்கும் குறிமுறை : சரியாகச் செயல்படுகிறதா என தன்னைத் தானே சரிபார்த்துக்கொள்ளும் நிரல் குறிமுறை. பொதுவாக, சில உள்ளீட்டு மதிப்புகளை தானாகவே எடுத்துக் கொண்டு, கிடைக்கின்ற விடையை, வரவேண்டிய வெளியீட்டு மதிப்புகளோடு சரிபார்த்துக்கொள்ளும்.

send: அனுப்பு: தகவல் தொடர்புத் தடத்தின் வழியாக ஒரு செய்தியை அல்லது கோப்பினை அனுப்பி வைத்தல்.

send later : பின்னர் அனுப்பு.

send now : இப்போது அனுப்பு.

sender : அனுப்புநர்.

send statement : அனுப்பு கூற்று;அனுப்பு கட்டளை : ஸ்லிப் (SLIP), பீபீபீ (PPP) நெறிமுறைகளில், இணையச் சேவையாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சில குறிப்பிட்ட குறியீட்டெழுத்துகளை அனுப்புமாறு எழுதப்பட்ட கூற்று/கட்டளை.