பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

archie server

39

areachart


களுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கிறது. ஆவணக் காப்பகம் என்று பொருள்படும் ஆர்க்கிவ் என்ற சொல்லின் சுருக்கமே ஆர்க்கி ஆகும்.

archie server : ஆர்க்கி வழங்கன் கணினி:ஆர்க்கி சேமிப்பகம் : ஆர்க்கி சேவையகம் : இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப் பட்டுள்ள வழங்கன் கணினியின் பெயர்.

architectural protection : கட்டமைப்புப் பாதுகாப்பு : கட்டுமான காப்பு.

archival backup : ஆவண ஆதார நகல் .

archive : ஆவணக்காப்பகம், கோப்புச் சேமிப்பகம் : 1.வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்ற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது. 2.இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு. 3.இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் (Directory) அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்.

Archieve File : காப்பகக் கோப்பு : பல்வேறு கோப்புகளை உள்ளடக்கிய ஒரு கோப்பு. ஒரு மென்பொருள் தொகுப்பு.அதன் விளக்கக் குறிப்புகளையும் எடுத்துக்காட்டு உள்ளிட்டுக் கோப்புகளையும் உள்ளடக்கிய ஒரே கோப்பாக இருக்கமுடியும். இணையத்தில் செய்திக் குழுவில் (news group)தொகுக்கப்பட்ட செய்திகளையும் இச்சொற்றொடர் குறிக்கிறது. யூனிக்ஸ் முறைமையில் tar கட்டளை மூலம் காப்பகக் கோப்புகளைக் கையாள முடியும். அவற்றை இறுக்கிச் சுருக்கவும் முடியும். டாஸ் மற்றும் விண்டோஸ் இயக்கத் தளத்தில் pkzip, மேக் ஓ.எஸ் .இல் stuffit ஆகியவை ஏற்கெனவே இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளைக் கொண்ட காப்பகக் கோப்புகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

archive gateway : காப்பக வாயில்.

archive site : ஆவணக் காப்பகத் தளம் : கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1)பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதிவிறக்கம் செய்யலாம் (2)கோஃபர் (gopher) மூலம் அணுகலாம் (3)வைய விரிவலை (www)யில் பார்வையிடலாம்.

archiving : ஆவணப்படுத்தல்.

area : பரப்பு.

area density : பரப்பு அடர்த்தி .

area chart : பரப்புநிரல் படம் : வரைபட வகைகளுள் ஒன்று. கடந்த நான்கு காலாண்டுகளில் நடைபெற்ற விற்பனையின் அளவைக் குறிக்க இதுபோன்ற வரைபடத்தைப் பயன்படுத்தலாம். இருவேறு விவரக் குறிப்புகளைக் குறிக்கும் இரண்டு கோடுகளுக்கு இடையே நிறம் அல்லது புள்ளிகளால் நிறைத்துக் காட்டப்படும் பரப்பளவு.