பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

server-side include

408

set-top box


இழுவையில் வழங்கன், கிளையனுக்குத் தகவலைத் தருகிறது; ஆனால் தகவல் இணைப்பு தொடர்ந்து திறந்திருப்பதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேலும் தகவல் அனுப்பும் பொருட்டு தகவல் இணைப்பை மீண்டும் திறக்குமாறு உலாவிக்கு வழங்கன் ஒரு ஹெச்டீஎம்எல் ஆணையை அனுப்பி வைக்கும். பெரும்பாலும் ஒரு புதிய யூஆர்எல் லைத் திறக்கும்போது இது நிகழும்.

server-side include: பக்கச் சேர்ப்புகள்: வைய விரிவலை ஆவணங்களில் இயங்கு நிலையில் உரையைச் சேர்ப்பதற்கான ஒரு நுட்பம். இவை வழங்கனால் அறிந்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்ற தனிச் சிறப்பான கட்டளைக் குறிமுறைகளாகும். அந்த ஆவணம் உலாவிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக ஆவணத்தின் உடல் பகுதியில் அக்கட்டளைகளின் விடை சேர்க்கப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, உலாவிக்கு அனுப்பப்படும் ஆவணத்தில், அன்றைய தேதி, அப்போதைய நேரத்தை முத்திரையிட்டு அனுப்பி வைக்கலாம்.

server tier : வழங்கன் அடுக்கு.

server type : வழங்கன் வகை.

service : சேவை : 1. தொழில்நுட்ப உதவி அல்லது பிணைய வசதி போன்ற வாடிக்கையாளர் அடிப்படையிலான அல்லது பயனாளர் நோக்கிலான ஒரு பணி. 2. நிரலாக்கம் மற்றும் மென்பொருள்களில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு பிற நிரல்களுக்கு உதவி செய்தல். பெரும்பாலும், வன்பொருளுக்கு நெருக்கமான அடிநிலைப்பணிகளாக இருக்கும்.

Service Advertising Protocol: சேவை விளம்பர நெறிமுறை : ஒரு பிணையத்திலுள்ள (கோப்பு வழங்கன் அல்லது பயன்பாட்டு வழங்கன் போன்றவற்றிலுள்ள) ஒரு சேவை வழங்கும் கணுக்கணினி, பிணையத்திலுள்ள பிற கணுக்களுக்குத் தன்னை அணுக முடியும் என் அறிவித்தல். ஒரு வழங்கன் இயக்கப்படும்போது, தனது சேவைகளை விளம்பரப்படுத்த இந்த நெறிமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதே வழங்கன் அகல்நிலைக்கு மாறும்போது, இதே நெறிமுறையைப் பயன்படுத்தித் தன்னுடைய சேவைகள் இனி கிடைக்காது என்பதை அறிவிக்கின்றது.

session layer : அமர்வு அடுக்கு : ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ ஏழு அடுக்குகளில் ஐந்தாவது அடுக்கு. தகவல் தொடர்பு கொள்ளும் இரண்டு சாதனங்களும் கட்டாயம் ஒப்புக் கொள்ளக்கூடிய விவரங்களை அமர்வு அடுக்கு கையாள்கிறது.

set, data : தரவுக் கணம்.

set database password : தரவுத் தள நுழைசொல் அமை.

set print area : அச்சுப்பரப்பு அமை.

settling time : நிலைநிற்கும் நேரம் : ஒரு வட்டு இயக்கத்திலுள்ள படி/எழுது முனை ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது, புதிய இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

settings: அமைப்புகள்.

set-top box : மேல்நிலைப் பெட்டி : வடத் தொலைக்காட்சி சமிக்கைகளை தொலைக்காட்சிப் பெட்டியின் உள்ளீட்டு சமிக்கைகளாக மாற்றித்தரும் ஒரு சாதனம்.