பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

setup

409

SHA


தொலைக்காட்சி மூலமாக வைய விரிவலையில் உலாவர இத்தகு மேல்நிலைப் பெட்டிகள் பயன்படுகின்றன.

setup : நிறுவுகை.

setup wizard : நிறுவுகை வழிகாட்டி : மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத்தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனாளரை இட்டுச்செல்லும் ஒரு வழிமுறை.

.sf.ca.us : .எஸ்எஃப்.சிஏ.யுஎஸ் : ஒர் இணையத் தள முகவரி அமெரிக்க நாட்டு, கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sfil : எஸ்ஃபில் : மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ல் ஒலிக்கோப்புகளைக் குறிக்கும் கோப்பு வகைப் பெயர்.

.sg : .எஸ்ஜி : ஒர் இணைய தள முகவரி சிங்கப்பூரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

.sgm : .எஸ்ஜிஎம் : தரநிலைப் பொதுப்படைக் குறியிடு மொழி (Standard Generalized Markup Language - SGML)யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3.x கோப்பு வகைப் பெயர். எம்எஸ் டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x முறைமைகளில் கோப்பின் வகைப்பெயர் மூன்றெழுத்துகள் மட்டுமே. எனவேதான், sgml என்கிற வகைப்பெயர் மூன்றெழுத்தாகச் சுருக்கப்பட்டுவிடுகிறது.

.sgml : .எஸ்ஜிஎம்எல் : தரநிலைப் பொதுப்படைக் குறியிடு மொழி (Standard Generalized Markup Language) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

SGML : எஸ்ஜிஎம்எல் : தரநிலைப் பொதுப்படைக் குறியிடு மொழி எனப் பொருள்படும் Standard Generalized Markup Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1986ஆம் ஆண்டு பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (ISO) ஏற்றுக்கொண்ட தகவல் மேலாண்மைத் தரவரையறை. பணித்தளம் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் சாராத ஆவணங்களை உருவாக்க வழி கோலுகிறது. இவற்றின் வடிவாக்கம், சுட்டுக் குறிப்பு மற்றும் தொடுப்புத் தகவல்கள், பணித்தளம் மாறினாலும் மாறாமல் காப்பாற்றப்படுகின்றன. பயனாளர்கள் தமது ஆவணங்களின் கட்டமைப்பை இலக்கணப் போக்கிலான நுட்பத்துடன் வடிவமைக்க உதவுகிறது.

.sh : .எஸ்ஹெச் : ஒர் இணைய தள முகவரி செயின்ட் ஹெலினா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

SHA : எஸ்ஹெச்ஏ : பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தகவல் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) குறி முறையில் கணக்கிடும் நுட்பம். செய்திச் சுருக்கம் என்றும் கூறப்படும். அனுப்புபவரே எஸ்ஹெச் ஏ-யைப் பயன்படுத்துகிறார்.