பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shadow

410

sharing resources


செய்தியைப் பெறுபவர் இலக்க முறை ஒப்பத்தைச் சரிபார்க்க இதனைப் பயன்படுத்துகிறார்.

shadow : நிழல்.

shadow memory: நிழல் நினைவகம்: சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடக்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப்படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்தும் ஒரு நுட்பம். இவ்வாறு நகலெடுத்து வைப்பதால் கணினியின் செயல்திறன் கூடுகிறது. பயாஸ் நிரல்கூறுகளை பயாஸில் சென்று தேடாமல், நினைவகத்திலுள்ள நிழல் நகல்களில் எடுத்துக்கொள்ளும். நிழல் ரேம், நிழல் ரோம் என்றும் கூறுவர்.

shadow printer : நிழல் அச்சுப்பொறி.

shared folder : பகிர்வுக் கோப்புறை : ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்ட மேக்சிஸ்டம் 6.0 அல்லது பின்வந்த இயக்க முறைமையில் செயல்படும் ஒரு மெக்கின்டோஷ் கணினியில், ஒரு பயனாளர் பிணையத்தின் பிற பயனாளர்களுக்கு அணுக அனுமதி வழங்கக் கூடிய ஒரு கோப்புறை. ஒரு பீசியில் வழங்கப்படும் நெட்வொர்க் கோப்பகம் (Network Directory) என்பதோடு ஒத்தது.

shared logic : பகிர்வுத் தருக்கம் : ஒரு செயல்பாட்டை நடைமுறைப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட மின்சுற்றுகள் அல்லது மென்பொருள் நிரல்கூறுகளைப் பயன்படுத்துதல்.

shared memory : பகிர்வு நினைவகம் : 1. ஒரு பல்பணிச் சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்கள் அணுகுகின்ற நினைவகம். 2. இணைநிலைச் செயலிகள் கொண்ட கணினி அமைப்புகளில் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் நினைவகப் பகுதி.

shared printer: பகிர்வு அச்சுப்பொறி : ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அச்சுப்பொறி. பிணையத்தில் இணைக்கப்படும் அச்சுப்பொறியும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

shared resource : பகிர்வு வளம் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் அல்லது நிரல்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும் ஒரு சாதனம் அல்லது தகவல் அல்லது நிரல். 2. விண்டோஸ் என்டியில் பிணையப் பயனாளர்கள் அணுகுவதற்குரிய கோப்பகங்கள், கோப்புகள், அச்சுப்பொறிகள் போன்ற வளங்கள்.

shareware : பகிர்வுமென்பொருள் : "வாங்கும் முன் பயன்படுத்திப் பார்" என்ற அடிப்படையில் வினியோகிக்கப்படுகின்ற பதிப்புரிமை பெற்ற மென்பொருள். பரிசோதனை காலத்துக்கு அப்பாலும் அம்மென்பொருளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், அதனை உருவாக்கியவருக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

shareware centre : பகிர்வுமென்பொருள் மையம்; பங்கீட்டு மென்பொருள் மையம்.

shareware and freeware : பகிர்வுமென்பொருள்-இலவச மென்பொருள்.

sharing, time : காலப் பகிர்வு.

sharing resources : வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.