பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sheet

411

shovelware


sheet : தாள்.

sheet-fed scanner : தாள் செருகு வருடுபொறி : இவ்வகை வருடுபொறிகளில் ஒரு நேரத்தில் ஒற்றைத் தாள் உள்ளிழுக்கப்பட்டு, நிலைத்திருக்கும் வருடுபொறியமைவின் மீது நகரும்போது பட/உரைத் தகவல் பதியப்பட்டுவிடும். பல பக்கங்கள் உள்ள ஆவணங்களை தானாகவே தொடர்ச்சியாக வருடியெடுக்கும் வசதி இவ்வகை வருடுபொறிகளில் உண்டு.

sheet, coding : குறிமுறைத் தாள்.

shell account: செயல்தளக் கணக்கு : கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்க முறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினி சேவை. பெரும்பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்கும். வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) வழியாக இணையத்தில் உலாவர இதில் வசதியில்லை. இணைய வசதிகள் அனைத்துமே எழுத்து/உரை அடிப்படையிலான கருவிகள் மூலமே பெறமுடியும். இணையத்தில் உலாவ லின்ஸ்க் (Lynx) என்னும் உலாவியும், பைன் (pine) என்னும் மின்னஞ்சல் மென்பொருளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

shift, arithmetical : கணக்கியல் பெயர்வு.

shift, logical : தருக்கப் பெயர்வு.

shift, right : வலப் பெயர்வு.

short : சிறு முழு எண்; சி, சி++, சி#, ஜாவா மொழிகளில் கையாளப்படும் தரவினம்.

shortcut : குறுவழி : விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன்மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தகவல் கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உடனடியாக அணுக முடியும். பிற கோப்புறைகளிலும் இத்தகைய குறுவழிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

shorter wave langth : குறைந்த அலை நீளம்.

shortcut key : குறுவழி விசை.

short-haul : குறைதொலைவு : 20 மைல்களுக்கும் குறைவான தொலைவுக்கு ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், ஒரு தகவல் தொடர்புச் சாதனம் சமிக்கைகளை அனுப்புதல்.

shout : கூவு; சத்தமிடு; அழுத்தமாய்ச் சொல், உரத்துச் சொல் : மின்னஞ்சல் அல்லது செய்திக் குழு கட்டுரைகளில் அழுத்தமாய்ச் சொல்ல விரும்பும் கருத்துகளை அனைத்தும் பெரிய எழுத்தில் தெரிவிப்பது. மிகையான சத்தமிடல் வலைப் பண்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. இரண்டு நட்சத்திரக் குறிகளுக்கிடையில் அல்லது இரண்டு அடிக்கீறு (underscore) களுக்கிடையில் குறிப்பிடுவதன் மூலம் கருத்துகளை உரத்துச் சொல்லலாம்.

shovelware : வாரியிடு பொருள்கள்; அள்ளித்தரு பொருள்கள் : இணையத்தில் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்ற மென்பொருள்கள், பகிர்வு மென்பொருள்களை ஒரு குறுவட்டில் (சிடிரோம் வட்டு) பதிவு செய்து விற்பது. இவற்றில் பெரும்பாலும் வரைகலைப் படிமங்கள், உரைப் பகுதிகள், சிறுசிறு பயன்கூறுகள்