பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

show auditing toolbar

412

sibling


அல்லது பிற தகவல்கள் இடம் பெறுவதுண்டு.

show auditing toolbar : தணிக்கைக் கருவிப்பட்டை காண்பி.

show clock :கடிகாரம் காண்பி .

show log :பதிகை காண்பி .

show small icons in start menu: தொடக்கப் பட்டியில் சிறு சின்னங்களைக் காண்பி,

show sounds :ஒலியைக் காட்டு :விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் காது கேளாதோருக்கு அல்லது இரைச்சலான தொழில் கூடங்களில் பணிபுரிபவருக்கென அமைந்துள்ள வசதி. பயனாளரின் கவனத்தைக் கவர சில பயன்பாட்டு நிரல்களில் ஒலியெழுப்புமாறு அமைத்திருப்பர். அவ்வாறு ஒலி எழுப்பப்படும் போதெல்லாம் கண்ணில் படும்படியாக ஒரு செய்திக்குறிப்பைத் திரையில் காட்சிப்படுத்துமாறு கட்டளையிட வசதியுள்ளது.

shrink-wrapped :முடித்துக்கட்டியது : வணிக முறையில் வினியோகம் செய்யத் தயாராக பெட்டியில் போட்டு முத்திரையிடப்பட்டு விற்பனைக்கு வினியோகிக்கத் தயாராய் இருக்கும் பொருள். பெரும்பாலும், பீட்டா பதிப்பினை இவ்வாறு அழைப்பதில்லை. முடிக்கப்பட்ட இறுதிப் பதிப்பிற்கே இவ்வடைமொழி பயன்படுத்தப்படுகிறது.

SHTML : எஸ்ஹெச்டிஎம்எல் : வழங்கன் கூறாக்கும் ஹெச்டிஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியீடு மொழி (Hyper Text Markup Language)யில் அமைந்த உரை. எஸ்ஹெச்டிஎம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பி வைக்கும்.

S-HTTP : எஸ்-ஹெச்டீடீபீ : பாதுகாப்பான மீவுரைப் பரிமாற்ற நெறி முறை என்று பொருள்படும் Secure Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்வேறு மறையாக்கம் மற்றும் ஒப்புச்சான்று முறைகளை ஏற்பதாகும். அனைத்துப் பரிமாற்றங்களையும் முனைக்குமுனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹெச்டீடீபீயின் நீட்டிப்பு நெறி முறையாகும்.

shutdown : நிறுத்து; முடித்துவை : தகவல் இழப்பு எதுவும் நேரா வகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்.

shut off :நிறுத்துக.

.si : .எஸ்ஐ : ஒர் இணையதள முகவரி ஸ்லோவானிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sibling : உடன்பிறப்பு : ஒரு மரவுரு தரவுக் கட்டமைப்பில் ஒரே மூதாதையரிடமிருந்து கிளைத்த கணுக்கள்.

B, Cஆகியவை உடன்பிறப்புகள் D, E, Fஆகியவை உடன்பிறப்புகள்