பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

silicon-on-sapphire

414

single-board


silicon-on-sapphire : மாணிக்கத்தில் சிலிக்கான் : குறைகடத்திகளை உருவாக்குதலில் ஒருவகை. செயற்கை மாணிக்கக் கல்லினால் கடத்தல் தடுப்பு செய்யப்பட்ட ஒற்றைச் சிலிக்கான் அடுக்கினால் ஆன குறை கடத்திச் சாதனங்கள்.

silicon valley :சிலிக்கான் வேலி; சிலிக்கான் பள்ளத்தாக்கு : கலிஃபோர்னியாவில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதன் உண்மையான பெயர் சாந்தா கிளாரா பள்ளத்தாக்கு என்பதாகும். பாலோ ஆல்ட்டோவிலிருந்து சான் ஜோஸ் வரையுள்ள பகுதி இது. மிகப் பெரும் மின்னணு மற்றும் கணினி ஆய்வு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

SIMD : எஸ்ஐஎம்டி : ஒற்றை ஆணை பல தகவல் என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒரு வகை. ஒரு ஆணைச்செயலி ஆணையைக் கொணர்ந்து மற்ற பல செயலிகளுக்கு ஆணைகளை அனுப்பிவைக்கும்.

SIMM : சிம் : ஒற்றை உள்ளக நினைவுகக் கூறு என்று பொருள்படும் Single Inline Memory Module என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நினைவகச் சிப்புகளை மேற்பரப்பில் செருகக் கூடியவாறு வடிமைக்கப்பட்ட ஒரு சிறிய மின்சுற்றுப் பலகை.

Simple Mail Transfer Protocol : எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை : ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக எஸ்எம்டீபீ (SMTP) என்று அழைப்பர்.

simple querry wiz : எளிய வினவல் வழிகாட்டி.

simple type : சாதாவகை; எளிய இனம். simultaneous : 2 Le flap; 905ri கியல்; ஒரே நேர.

sine wave : சைன் அலை : ஒற்றை அலைவரிசையில் அதிரும் பொருள்களினால் உருவாக்கப்படும் ஒரே சீரான, குறிப்பிட்ட நேரச் சீர்மையுடன் கூடிய அலை. மற்ற பல செயலிகளுக்கு ஆணை களை அனுப்பிவைக்கும். நேரம்


சைன் அலை

single : தனி; ஒற்றை.

single bit error :ஒற்றை பிட் பிழை; ஒற்றைத் துண்மி வழு.

single-board : ஒற்றைப் பலகை : கணினியில் இருக்கும் ஒருவகை