பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

skew

416

Slow Keys


skew : சாய்வு; திரிபு; கோணல் : எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கிடையேயான வேறுபாடு. (எ-டு) ஒர் ஆவணத்தை அச்செடுக்கும்போது உள்ளபடி அச்சாகாமல், சீரமைவு சரியின்றி அச்சாதல். மின்சுற்றுகள் பரப்பப்படும் சமிக்கைகளுக்கு ஒன்று போலப் பதிலிறுக்காத சூழ்நிலையில், உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே வேறுபாடு இருத்தல்.

skutch box : ஸ்கட்ச் பெட்டி : ஸ்கட்ச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு சாதனத்தின் பேச்சுவழக்குச் சொல். ஒரு தொலைபேசி இணைப்புபோன்ற பாவிப்புகளை (simulations) உருவாக்க இந்த சாதனம் உதவும். தொலைத் தொடர்பு அமைப்புகளையும் சாதனங்களையும் சோதனை செய்ய இச்சாதனம் உதவும்.

skip forward : முன்னோக்கி நகர்.

.sl : .எஸ்எல் : ஒர் இணைய தள முகவரி சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

slave system : அடிமை முறைமை.

slide show : படவில்லைக் காட்சி; படப்பலகைக் காட்சி.

SLIP : ஸ்லிப் : 1. நேரியல் இணைப்பு இணைய நெறிமுறை என்று பொருள்படும் Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபீ தரவுப் பொட்டலங்களை தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்புவதற்கு அனுமதிக்கும் ஒரு தரவுத் தொடுப்பு நெறிமுறை (Data Link Protocol). ஒரு தனிக் கணினி அல்லது ஒரு குறும்பரப்புப் பிணையம், இணையத்துடனோ இன்னபிற பிணையங்களுடனோ இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள இது வசதி செய்கிறது.

SLIP emulator : ஸ்லிப் போன்மி; ஸ்லிப் ஒப்பாக்கி; ஸ்லிப் போலாக்கி: யூனிக்ஸ் செயல்தள இணைப்புகளில் நேரடியான ஸ்லிட் இணைப்பு வழங்காமல், ஸ்லிப் இணைப்பு போலவே செயல்படும் மென்பொருள். பெரும்பாலான இணையச் சேவை நிறுவனங்கள் யூனிக்ஸ் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. பயனாளர்களுக்கு செயல்தளக் கணக்கு மூலம் இணைய அணுகலை வழங்குகின்றன. ஸ்லிப் இணைப்பு போன்றே, ஸ்லிப் போன்மிகளும் பயனாளர், இணையத்தில் இணையும்போது, நேரடியாக, சேவை நிறுவனத்தின் யூனிக்ஸ் சூழலை அணுகுவதைத் தவிர்த்து, வரைகலை வலை உலாவிகளைப் போன்றே இணையப் பயன்பாடுகளை நுகர்வதற்கு வாய்ப்பளிக்கின்றன.

slotted ring : செருகுவாய் வளையம்.

Slow Keys : மெதுவிசைகள் : மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் போது கவனக்குறைவாக அருகிலுள்ள பிற விசைகள் மீது விரல்கள் லேசாகப்பட்டாலும் விரும்பத்தகாத எழுத்துகள் பதிவாவதுண்டு. இந்நிலைமையைப்போக்கவே இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு விசைமீது சிறிது நேரம் விரலை