பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

smilley

418

SNMP


பரப்புப் பிணையங்களையும் பொதுத் தொலைபேசிப் பிணையம் மூலமாக இணைக்கிறது.

smiley : குறுநகையி.

S/MIME : எஸ்/மைம் : பாதுகாப்பான பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் என்று பொருள்படும் Secure/Multipurpose Internet Mail Extensions என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். பொதுத் திறவி (Public Key) மறையாக்கத்தை (encryption) பயன்படுத்திக்கொள்கிற ஒர் இணைய மின்னஞ்சல் பாது காப்புத் தர வரையறை. SMTP (Simple Mail Transfer Protocol): எஸ்எம்டிபீ - எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை.

smoke test : புகைச் சோதனை : ஒரு வன்பொருள் கருவியைச் செய்து முடித்தவுடன் அல்லது பழுது பாாதது முடிததவுடன. அதனை இயக்கிப் பரிசோதித்தல். அக்கருவி யிலிருந்து புகை வந்தாலோ, வெடித்து விட்டாலோ அல்லது எதிர் பாராக் கடும்விளைவு ஏற்பட்டாலோ அது நன்றாக இயங்குவதுபோல் இருந்தாலும், சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும்.

SMP server : எஸ்எம்பி வழங்கன் : செவ்வொழுங்கு பல்செயலாக்க sugiisair (Symmetric Multiprocessing Server) என்பதன் சுருக்கம். கிளை யன்/வழங்கன் பயன்பாடுகளில் வழங்கனின் செயல்திறனை மிகு விக்க ஒரு கணினி எஸ்.எம்.பீ கட்டு மானத்தில் வடிவமைக்கப்படுகிறது.

.sn : .எஸ்என் : ஒர் இணைய தள முகவரி செனகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

snapshot programme : நொடிப்பு நிரல்; நொடிப்பார்வை நிரல் : குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நினைவகத்தின் ஒரு பகுதியை நொடிப்பார்வையிட்டு கண் காணிக்கும் நிரல்.

snail mail : நத்தை அஞ்சல் : மரபு முறையிலான அஞ்சல் போக்கு வரத்தை அதன் வேகங்கருதி இணையப் பயனாளர்கள் கிண்ட லாகக் குறிப்பிடுவது. மின்னஞ் சலோடு ஒப்பிடுகையில் மரபுமுறை அஞ்சல் நத்தை வேகமே.

.snd : .எஸ்என்டி : சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃபிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்பொலித் தகவலைக் கொண் டிருக்கும். ஒர் உரை அடையாளங் காட்டி தொடக்கத்தில் இருக்கும்.

sneakernet : மறைநிலைப் பிணையம்; மறைமுகப் பிணையம் பிணையத்தில் பிணைக்கப்படாத இரு கணினிகளுக்கிடையே நடை பெறும் தகவல் பரிமாற்றம். பரிமாற வேண்டிய கோப்புகளை ஒரு நெகிழ் வட்டில் நகலெடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வட்டினை ஒருவர் நேரில் எடுத்துச் சென்று இன்னொரு கணினியில் கோப்புகளை நகலெடுப்பார்.

SΝΜΡ : எஸ்என்எம்பீ எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ.யின் பிணைய