பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

software suite

420

sound generator


|

மென்பொருள் தொகுப்புகளை வடிவமைத்து உருவாக்கி வினியோகித்தல்

software suite :மென்பொருள் கூட்டுத்தொகுப்பு.

softwhite: மென்வெண்மை.

solid model :திண்ம மாதிரியம்.

solid state:திடநிலை;திண்மநிலை.

solid-state disk drive: திண்மநிலை வட்டு இயக்ககம் : காந்தமுறைச் சேமிப்பகத்துக்குப் பதிலாக ரேம் நினைவகச் சிப்புகளில் ஏராளமான தகவலைச் சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புச் சாதனம்.

solid-state relay: திண்மநிலை இடைமாற்றி : ஒரு மின்சுற்றினைத் திறக்கவும் மூடவும் திண்மநிலை உறுப்புகளைக் கொண்ட இடைமாற்றி.

SOM : சாம்; எஸ்ஓஎம் : முறைமை பொருள் மாதிரியம் எனப்பொருள் System Object Model என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கோர்பா (CORBA) தர வரையறைகளை செயல்படுத்துகின்ற, ஐபிஎம்மின்மொழிசாராக்கட்டுமானம்.

SONET : சோநெட் : ஒத்திசை ஒளிவப் பிணையம் என்று பொருள்படும் Synchronous Optical Network என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேகத் தகவல் பரிமாற்றத்துக்கு (51.84 எம்பிபீஎஸ் முதல் 2.48 ஜிபிபீஎஸ் வரை) வழி வகுக்கும் இழைஒளித் தகவல் தொடர்பு தரவரையறைகளின் ஒரு வகைப்பாடு.

sort order :வரிசை ஒழுங்கு.

sort/merge :வரிசையாக்கு/ ஒன்று சேர்ப்புநிரல்.

sorter : பிரிப்பி, வகைப்படுத்தி; வரிசையாக்கி.

sorting : வரிசையாக்கம்.

sound buffer : ஒலி இடையகம் : கணினியிலிருந்து ஒலிபெருக்கி களுக்கு அனுப்பப்பட இருக்கும் ஒலித் தகவலின் துண்மிப் (பிட்) படிமங்களைச் சேமிக்கப் பயன்படும் நினைவகப் பகுதி.

sound card :ஒலி அட்டை :பீசி ஒத்தியல்புக் கணினிகளில் இருக்கும் ஒருவகை விரிவாக்க அட்டை. ஒலியைப் பதிவுசெய்ய, ஒலியை மீண்டும் இசைக்கச் செய்ய முடியும். ஒரு WAV அல்லது MIDI கோப்புகளை அல்லது ஒரு இசைக் குறுவட்டிலிருந்து பாடல்களைக் கேட்க முடியும். தற்காலத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கணினிகளில் ஒலி அட்டை தனியாக இருப்பதில்லை. தாய்ப்பலகையிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

sound clip : ஒலித்துணுக்கு: ஒலி நறுக்கு : ஒரு குறுகிய கேட்பொலித் துணுக்கைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. பெரும்பாலும் ஒரு நீண்ட இசைப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய ஒலித்துணுக்கு.

sound editor : ஒலித்தொகுப்பி, ஒலி திருத்தி : பயனாளர் ஒலிக்கோப்புகளை உருவாக்கிக் கையாள வகை செய்யும் ஒரு நிரல்.

sound format : ஒலி வடிவம்.

sound generator : ஒலி இயற்றி; ஒலி உருவாக்கி : செயற்கை ஒலியை உருவாக்கும் கருவி. ஒரு சிப்புவாக அல்லது சிப்புநிலை மின்சுற்றாக இருக்கலாம். மின்னணுச் சமிக்கைகளை உருவாக்கி, ஒலிபெருக்கிகள்