பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spead transmision

422

spot colour


|

தகவல்களை எளிதாகப் புரிந்து கொண்டு கையாளும்பொருட்டு, கணினித் திரையில் சின்னங்களை அடுக்கி வைத்திருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட இடப்பரப்பில் தகவல்களைப் பொருள்களின் தொகுதியாக உருவகிக்கும் முறை.

spead, transmission : பரப்பு வேகம்.

speaker : ஒலிபெருக்கி.

specific address:குறிப்பிட்ட முகவரி.

specification systems : முறைமை வரன்முறை.

spectrum : நிறமாலை : ஒரு குறிப்பிட்ட வகைக் கதிர்வீச்சின் அலை வரிசை வரம்பெல்லை ஆகும். சூழ் நிலையைப் பொறுத்து ஒரு பொருளினால் உமிழப்படலாம் அல்லது உட்கவரப்படலாம்.

spell checker : சொற்பிழை திருத்தி; சொல்திருத்தி.

spew : கக்கல்; உமிழ்வு : இணையத்தில் அளவுக்கதிகமான எண்ணிக் கையில் மின்னஞ்சல் செய்திகளையோ, செய்திக்குழுக் கட்டுரை களையோ வெளியிடல்.

spider : சிலந்தி : இணையத்தில் புதிய வலை ஆவணங்களைத் தேடி அவற்றின் முகவரிகளையும் உள்ளடக்கத் தகவலையும் ஒரு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கும் தானியங்கு நிரல். குறிப்பிட்ட கால இடை வெளியில் தானாகவே இப்பணியைச் செய்து கொண்டிருக்கும். தேடு பொறிகள் மூலம் இத்தரவுத் தளத்தின் வாயிலாக வேண்டிய தகவல்களை எளிதாகத் தேடிப் பெறலாம். சிலந்தி நிரல்களை இணைய எந்திரன் (Internet Robot)என அழைக்கலாம்.

spin rate : சுழல் வேகம்.

split : பிரி.

split bat : பகுத்த பட்டை, பிரிந்த பட்டை.

split cell : கலம் பிரி.

split table : அட்டவணை பிரி.

splitting a windows : சாளரத்தைப் பிரித்தல்.

spoken media:பேச்சு ஊடகம்.

spoofing : ஏமாற்றுதல் : இணையத்தில் ஒரு தகவல், அனுமதி பெற்ற பயனாளர் ஒருவரிடமிருந்து அனுப்பப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குதல். எடுத்துக்காட்டாக, ஒரு பிணையத்தில் அனுமதிபெற்ற பயனாளர் ஒருவரின் ஐபி முகவரியைக் காட்டி ஏமாற்றி உள்ளே நுழைதல் ஐபீ-ஏமாற்றல் எனப்படுகிறது.

spot : புள்ளி; குறியிடம் : ஒரு போஸ்ட்-ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியில் ஒளி-நிழல் வேறுபாட்டு செயலாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும். ஒரு கலவைப் புள்ளி. ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் (pixel) சாம்பல்நிற அளவைச் சரியாக வெளிப்படுத்த குறிப்பிட்ட தோரணி யில் பல புள்ளிகள் ஒரு குழுவாக இடம் பெறுகின்றன.

spot colour: குறியிட நிறம், புள்ளி நிறம் : ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழிமுறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரையறுத்துவிட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு