பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

start menu

425

state-of-the-art


|

பார்வையிட உதவுவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வைய விரி வலை ஆவணம். பெரும்பாலும், தேடுபொறி போன்ற கருவிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகளையும் இந்த ஆவணம் கொண்டிருக்கும்.

start menu :தொடங்கு பட்டி.

startup application:தொடக்கப் பயன்பாடு : கணினி இயக்கப்பட்டவுடன் கணினியின் கட்டுப்பாடு முழுமையையும் எடுத்துக் கொள்ளும் பயன்பாடு.

startup.cmd : ஸ்டார்டப்.சிஎம்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில் தொடக்க இயக்க வட்டில் மூலக் கோப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பயன் தொகுதிக்கோப்பு. எம்எஸ் டாஸில் இதற்கு இணையான கோப்பு ஆட்டோ இஎக்ஸ்இசி.பேட்

startup ROM : தொடக்க ரோம்: கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க ஆணைகள் செயல்படுத்தப் படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்துகொள்ளவும், விசைப்பலகை, வட்டு இயக்ககங்கள் போன்ற சாதனங் களைச் சரிபார்க்கவும் ரோமில் பதியப்பட்டுள்ள நிரல் கூறுகள் உதவுகின்றன. இறுதியில் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் நிரலை இயக்கும் தூண்டு நிரல் செயல்படுத்தப்படுகிறது.

startup screen :தொடக்க திரை: ஒரு நிரல் இயக்கப்பட்டவுடன் முதன் முதலாகத் தோன்றும் உரை அல்லது வரைகலைக் காட்சித் திரை. தொடக்கத் திரையில் பெரும்பாலும் மென்பொருளின் பதிப்பு, நிறுவன வணிகச் சின்னம் போன்ற தகவல்கள் இடம்பெறும்.

stateful: நிலைமைக் கண்காணி : ஒரு கணினி அல்லது செயலாக்கம் தான் பங்குபெறும் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் நுணுக்கமாகக் கண்காணிப்பது. (எ-டு) செய்தி களைக் கையாளுகையில் அவற்றின் உள்ளடக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது.

stateless : கண்காணிக்காமல்; நிலை கருதாமல் : ஒரு கணினி அல்லது செயலாக்கம் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் கண்காணிக்காமலே பங்கு பெறுவது. (எ-டு): செய்திகளைக் கையாளும்போது அவற்றின் மூலம் (source), சேரிடம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது. உள்ளடக்கத்தை விட்டுவிடுவது.

statement : கூற்று : ஒரு நிரலாக்க மொழியில் நிறைவேற்றப்படச் கூடிய மிகச்சிறிய சொல்தொடர். ஆணை என்றும் அறியப்படும்.

statement, arithemetic : கணக்கீட்டுக் கூற்று.

statement, control : கட்டுப்பாட்டு கூற்று.

statement, label : சிட்டைக் கூற்று.

state-of-the-art :புத்தம் புதிய;நவீன; இற்றைத் தொழில்நுட்பம் : காலாவதி ஆகிப்போன வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்காமல், மிகநவீன இற்றைநாள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருத்தல்.