பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.state us

426

status codes


|

.state.us :ஸ்டேட்.யுஸ்:ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாநில அரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

static object : நிலை பொருள்; மாறாப் பொருள்.

static allocation:நிலைத்த ஒதுக்கீடு: ஒருமுறை நடந்தேறும் நினைவக ஒதுக்கீடு. பெரும்பாலும் நிரல் தொடங்கும்போது செய்யப்படும். நிரல் செயல்பட்டு முடியும்வரை ஒதுக்கப்பட்ட நினைவகம் விடு விக்கப்படாமலே கட்டுண்டிருக்கும்.

static binding :நிலைத்த பிணைப்பு: நிரலை மொழிமாற்றும்போது (compiling)அல்லது தொடுப்புறுத்தும்போது (linkage) நிகழ்வது. நிரலிலுள்ள குறியீட்டு முகவரிகளை சேமிப்பிடஞ் சார்ந்த முகவரிகளாய் மாற்றியமைத்தல்.

static memory:மாறாநிலை நினைவகம்.

staticizing : பதிவக மாறா ஏற்றம்.

station : நிலையம்.

station, data :தரவு நிலையம். station, work : பணி நிலையம்.

stationery நிலையாவணம் :ஒருவகை ஆவணம், பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறு பெயரில் சேமித்துக் கொள்ளலாம். மூல ஆவணம் எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும். நிலையா வணங்களை ஆவண முன்படிவங் களாகவும் அச்சுவார்ப்புருக்களாகவும் பயன்படுத்தலாம்.

stationary, continuous : தொடர்தாள்.

statistical multiplexer : புள்ளியியல் ஒன்றுசேர்ப்பி : தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்றுசேர்ப்புச் சாதனம்.இடையகச் சேமிப்புகளைப் பயன் படுத்தி நேரப்பிரிவு ஒன்று சேர்ப்பில் (Time Division Multiplexing) சில அறிவுநுட்பத் தகவல்களைச் சேர்த்து விடும். அதன்பின் ஒரு நுண்செயலி அனுப்புகின்ற தாரைகளை (streams) ஒன்றுசேர்த்து ஒற்றைச் சமிக்கையாக மாற்றும். இயங்குநிலையில் இருக்கின்ற அலைக்கற்றையில் இத் தகவலுக்கென ஒதுக்கீடு செய்யும்.

status bar :நிலைமைப் பட்டை : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் பெரும்பாலான பயன்பாட்டு நிரல்களில் சாளரத்தின் அடிப்பகுதியில் ஒரு பட்டை தென்படும். நிரலின் தற்போதைய நிலையைக் குறிக்கும் செய்தி அதில் தெரிந்துகொண்டிருக்கும். சில நிரல்களில் தற்போது தேர்வுசெய்துள்ள பட்டிக் கட்டளைக்கான விளக்கத்தை நிலைமைப் பட்டையில் காணலாம்.

status codes : நிலைமைக் குறிமுறைகள் : ஒரு நடவடிக்கையின் முயற்சி வெற்றியா தோல்வியா என்பதைச் சுட்டும், இலக்கங்கள் அல்லது பிற எழுத்துகள் சேர்ந்த சரம். பழைய கணினி நிரல்களே குறிமுறைகளைப் பயன்படுத்தின. இப்போதைய மென்பொருள்கள் பலவும் சொற்கள், படங்கள் வழியாக நிலைமையைச் சுட்டுகின்றன. யூனிக்ஸில் செயல்தளக் (shell) கணக்கு வைத்திருப்பவர்கள், வலையில், எஃப்டீபீயில் பணிபுரியும் போது நிலைமைக் குறிமுறைகளைக் கண்டிருக்கலாம்.