பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stress test

429

subject tree



வன்பொருள் தயாரிப்புக்கு நுகர்வோர் செலுத்தும் உண்மையான சில்லறை விற்பனை விலை. பெரும்பாலான வேளைகளில் பரிந்துரைக்கப் பட்ட சில்லறை விற்பனை விலையை விடக் குறைவாகவே இருக்கும்.

stress test : தகைவுப் பரிசோதனை; அழுத்தச் சோதனை : ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் அமைப்பின் செயல்பாட்டெல்லைகளை, உச்ச அளவுத் தகவல்கள் அல்லது அதிகப்படியான வெப்ப நிலை போன்ற அதீத சூழ்நிலைகளில் பரிசோதனை செய்தல்.

strikethrough : குறுக்குக் கோடிடல் : தேர்ந்தெடுக்கப்பட்ட உரைப்பகுதி மீது ஒன்று அல்லது மேற்பட்ட கோடுகளைப் போடுதல். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி நீக்கப் பட்டதைக் குறிப்பதற்காக இவ்வாறு உரை வரிகளின் மீது குறுக்குக் கோடு போடப்படும்.

strike out : வெட்டி அகற்றல்.

string arithmetic : சரக் கணக்கீடு.

string alphabetic : அகர முதலிச்சரம்.

string buffer : சர இடையகம்.

string, character : எழுத்துச்சரம்.

string constructor : சரம் ஆக்கி.

string data : சரத்தரவு.

string, null : வெற்றுச்சரம்.

strobe : நேரச் சமிக்கை : விசைப் பலகை அல்லது அச்சுப்பொறி போன்ற உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதன இடைமுகங்களின் வழியே, தகவல் கடந்து செல்வதைத் தொடங்கிவைத்து ஒழுங்குபடுத்தும் நேரச் சமிக்கை.

stroke font : கோட்டு எழுத்துரு : கோடுகளின் மூலம் உருவாக்கப்படும் எழுத்துரு. திண்ம வடிவிலான வடிவங்களை நிரப்பிப் பெறப்படும் எழுத்துருக்களுக்கு மாற்றானது.

strong typing : ஆழ இன உணர்வு : நிரலாக்க மொழியிலுள்ள ஒரு பண்புக் கூறு. நிரல் செயல்படுத்தப் படும்போது ஒரு மாறியின் தரவினம் (Data type) மாற்றப்படுவதை அனுமதிக்காமை. அது போலவே, ஒரு செயல்கூறில் வரையறுக்கப் பட்டுள்ள அளபுருக்களும் அச்செயல் கூறினை அழைக்கும்போது தருகின்ற மதிப்புகளும் இனமொத்து இருக்க வேண்டும் என்பதைக் கட்டாய மாக்கும் பண்பு.

structure, file: கோப்புக் கட்டமைப்பு.

structure, tree : மரவுரூக் கட்டமைப்பு.

studies, feasibility: சாத்தியக் கூறாய்வு.

stylus printer: எழுத்தணி அச்சுப்பொறி.

.su : .எஸ்யூ : ஒர் இணைய தள முகவரி முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

subcommand : துணைக் கட்டளை : ஒரு துணைப் பட்டியில் (submenu) இருக்கும் ஒரு கட்டளை. (ஒர் உயர்நிலைப் பட்டியிலிருந்து ஒரு விருப்பத்தேர்வை தேர்வுசெய்யும் போது கிடைக்கும் இன்னொரு பட்டி துணைப்பட்டி எனப்படும்).

subdomain : உள்களம்; கிளைக் களம்.

sub form data sheet : உள்படிவத் தரவுத்தாள்.

subject : உள்ளடக்கம்; உட்பொருள்: கருப்பொருள்.

subject tree : கருப்பொருள் மரம் : வைய விரிவலையில் தகவல்களை