பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subnet

430

superscalar



கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப்படுத்தப்படும் முறை. ஒவ்வொரு வகையும் பல்வேறு கிளைகளாக- உள் வகைகளாக- பிரிக்கப்படும். அடி நிலையிலுள்ள கணுக்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்துக்கான தொடுப்பினைக் கொண்டிருக்கும். வையவிரி வலையின் கருப்பொருள் மரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு யாகூ தளத்தின் முகப்புப் பக்கப் பட்டியல்.

subnet : கிளைப் பிணையம்; உட்பிணையம் : ஒரு பெரிய பிணையத்தின் அங்கமாக இருக்கும் இன்னொரு பிணையம்.

subnotebook computer : சிறு கையேட்டுக் கணினி : வழக்கமான மடிக் கணினியைவிடச் சிறிய, எடை குறைந்த கையடக்கக் கணினி.

subscribe : உறுப்பினராகு; சந்தாதாரர் ஆகு : 1. செய்திக் குழுக்களின் பட்டியலில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்த்தல். புதிய செய்திக் குழுவிலிருந்து புதிய கட்டுரைகளை பயனாளர்கள் பெறுவர். 2. ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அது போன்ற சேவைகளில் பயனாளர் ஒருவர் உறுப்பினராதல்.

substitute : பதிலீடு.

subtracter : கழிப்பி.

subtraction : கழித்தல்.

subtree : கிளைமரம் : மரவுரு தரவுத் கட்டமைப்பில், ஒரு கணுவிலிருந்து கிளைத்துச் செல்லும் கணுக்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு கிளை மரவுருவாகவே தோற்றமளிக்கும்.

suggestion : கருத்துரை.

suitecase : குட்கேஸ்; (கைப்பெட்டி): மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன் கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக் கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத் தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்னத்துடன் காட்சியளிக்கும்.

sum : தொகை.

summary : சுருக்கம்; பிழிவு.

summarize : தொகுத்துக் கூறு : செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்களில் கருத்துக் கணிப்பு நடத்தி மின்னஞ்சல் மூலமாக கருத்துகளைச் சேகரித்து, முடிவுகளைத் தொகுத்து வெளியிடல்,

super : மீத்திறன்; மிகுதிறன்.

super disk : மீத்திறன்வட்டு; மிகுதிறன் வட்டு.

superpipelining : மீத்திறன் இணைச் செயலாக்ககம்: ஒரே நேரத்தில் நுண்செயலி, ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்ற வழி செய்யும் முறை இணைச் செயலாக்கம் (pipelining) எனப்படுகிறது. கொணர்தல், குறிவிலக்கல், இயக்குதல், திரும்பி எழுதல் போன்ற நுண்செயலிச் செயல்பாடுகள் சிறுசிறு கூறாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் நுண்செயலி வாளா இருக்கும் நேரம் குறைந்து அதன் செயல்திறன் அதிகரிக்கிறது.

superscalar : மீப்பெரும் அடுக்ககம்: நுண்செயலிக் கட்டுமான வகை. நுண்செயலி, ஒரு கடிகாரச் சுழற்சியில் பல ஆணைகளை இயக்கிட வகைசெய்யும் கட்டுமான முறை.