பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

superuser

431

SVGA



superuser : தலைமைப் பயனாளர் : யூனிக்ஸில் வரம்பற்ற அணுகல் சலுகைகள உடைய பயனாளர். பெரும்பாலும் அவர் முறைமை நிர்வாகியாக இருப்பார்.

super VAR : மீப்பெரும் வார்; மீப் பெரும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் : மிகப்பெரிய அளவிலான விற்பனையை மேற்கொள்ளும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் (Value-Added Retailer) என்பதன் சுருக்கம்.

supervisory programme : மேற்பார்வை நிரல்.

surf : உலாவு; மேய்; பார்வையிடு : இணையத்தில் உலாவுதல். செய்திக் குழுக்கள், கோஃபர் வெளிகள், குறிப்பாக வைய விரி வலையில் தகவல் குவியல்களுக்கு மத்தியில் உலா வருதல். தொலைக்காட்சியைப் பார்க்கும்போது பல்வேறு அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிப் பார்ப்பதுபோல இணையத்திலும் வேறுவேறு தலைப்புகளில் தகவலைத் தேடி இணையத்தளங்களிடையே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி மேலோட்டமாகப் பார்வையிடல்.

surface of revalution: சுழற்சிப் பரப்பு.

surges : எழுச்சிகள்.

surround : சுற்றுவெளி.

surround sound : பல்திசையொலி; சுற்றுவெளி ஒலி.

surge protection: எழுச்சிப் பாதுகாப்பு.

suspend command : இடைநிறுத்தக் கட்டளை: விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிற வகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டித் தேர்வில் இடைநிறுத்து (suspend) என்னும் கட்டளையைத் தேர்வுசெய்தால், கணினியின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால் கணினிக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது. விசைப் பலகையில் ஒரு விசையை அழுத்தியதும் கணினி மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும்.

sustained transfer rate : தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம்; தளராப் பரிமாற்ற வீதம் : வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தகவலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தகவல் பரிமாறும் வேகத்தைக் குறிக்கிறது.

.sv : .எஸ்வி : ஒர் இணைய தள முகவரி எல்சால்வாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ᏚVC : எஸ்வீசி : இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு கணுக்களிடையே ஏற்படும் தருக்கநிலை இணைப்பு. இரண்டுக்குமிடையே தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டி இருந்தால் மட்டுமே இத்தகைய இணைப்பு ஏற்படும்.

ᏚVᏀᎪ : எஸ்விஜிஏ : மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video