பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

S-video connector

432

switching hub



Graphics Array என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தருவதற்காக 1989ஆம் ஆண்டு ஒளிக் காட்சி மின்னணுத் தரக்கட்டுப்பாட்டு சங்கம் (Video Electronics Standards Association-VESA) உருவாக்கிய ஒளிக்காட்சித் தர வரையறை. எஸ்விஜிஏ ஒரு தர வரையறை என்ற போதிலும் சிலவேளைகளில் ஒளிக்காட்சி பயாஸுடன் ஒத்தியல்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

S-video connector: எஸ்-ஒளிக்காட்சி இணைப்பி : ஒளிக்காட்சிச் சாதனங்களின் நிறச்செறிவு (Chrominance), ஒளிச்செறிவு (Luminance) ஆகியவற்றைத் தனித்தனியே கையாளும் ஒரு வன்பொருள் இடைமுகம். ஆர்சிஏ -வகை அல்லது பிற கலவை இணைப்பிகளைப் பயன்படுத்திப் பெறுகின்ற படிமத்தைவிடக் கூர்மையான படிமத்தை இவ்வகை இணைப்பிகள் தரவல்லவை.

swap . இடமாற்று, மாறுமிகள் : 1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக் கொள்ளல். இரண்டு மாறிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ் வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப் பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுதியையோ, தகவல்களையோ நினைவகத்திலிருந்து வட்டுக்கு, வட்டிலிருந்து நினைவகத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளல்.

switch board manager : நிலைமாற்றிப் பலகை மேலாளர். -

switch mode power supply : நிலைமாற்றிப் பாங்கு மின்வழங்கி.

switch, console: பணியக நிலைாற்றி

switch, toggle : இருநிலைமாற்றி.

switched Ethernet : இணைப்புறு ஈதர்நெட் : ஒரு ஈதர்நெட் குவியத்துக்குப் (Hub) பதிலாக ஒர் அதிவேக இணைப்பகத்தைப் (switch) பயன்படுத்தும் ஓர் ஈதர்நெட் பிணையம்.

switcher : சுவிட்சர் (நிலைமாற்றி) : மெக்கின்டோஷ் கணினிகளில் உள்ள ஒரு தனிச்சிறப்பான பயன்கூறு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை நினைவகத்தில் தங்கியிருக்கச் செய்யும். பின்னாளில் சுவிட்சருக்குப் பதிலாக மல்ட்டிஃபைண்டர் (பல் முனைத் தேடி) என்னும் வசதி புகுத்தப்பட்டது.

switching : இணைப்பித்தல் ; இணைப்புறுத்தல் : இருமுனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழிமுறை. எடுத்துக்காட்டாக, தொலைபேசி வழியான பிணைய இணைப்பில் அழைத்தவர்க்கும் அழைக்கப்பட்டவர்க்கும் இடையேயான தொடர்பு ஒர் இணைப்பக மையம் வழியேதான் நடைபெறுகிறது. கணினிப் பிணையங்களில் இரண்டு முனைகள் தகவல் பரிமாறிக் கொள்ள செய்தி இணைப்புறுத்தல் பொதி இணைப்புறுத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு முறையிலுமே இடைநிலை நிலையங்கள் மூலம் செய்திகள் திசைவிக்கப் படுகின்றன. இதனால் அனுப்பி/ வாங்கி இரண்டுக்கும் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.

switching hub : இணைப்பகக் குவியம் : வெவ்வேறு தகவல் தொடர்பு