பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

switching speed

433

SYN



இணைப்புகளை ஒரு பிணையத்தில் இணைத்து, பிணையத்திலுள்ள கணினிகளுக்கிடையே செய்திகளையும், தகவல் பொதிகளையும் திசைவித்து அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையச் சாதனம்.

switching speed : இணைப்புறு வேகம் : ஏடீம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தில் தகவல் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது. இணைப்புறு வேகம் வினாடிக்கு இத்துணை கிலோபிட்ஸ் அல்லது மெகாபிட்ஸ் என்ற அலகுகளில் அளக்கப்படுகிறது.

Switch Mode Power Supply (SMPS): நிலைமாற்று முறைமை மின்வழங்கி.

.sy : .எஸ்ஒய் : ஒர் இணைய தள முகவரி சிரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

SYLK file : சில்க் கோப்பு: குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link File என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வடிவாக்க அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோப்பு. விரிதாள்களிலுள்ள வடிவமைப்புத் (Formating) தகவல்கள் மற்றும் கல மதிப்புகளுக்கிடையேயான உறவு முறைகள் பாது காக்கப்படுகின்றன.

syllable structure : அசைபிரிப்பி.

symbol font: குறியீட்டு எழுத்துரு : சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்பதுண்டு.

symbolic link: குறியீட்டுத் தொடுப்பு: வட்டில் ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புப் பட்டியலில், கோப்பகத்திலுள்ள ஒரு கோப்பினைச் சுட்டும் தொடுப்பினைப் பதிவுசெய்து வைத்தல்.

symbol set : குறியீட்டுத் தொகுதி : ஒரு நிரலாக்க மொழிக்குரிய குறியீடுகள் அல்லது ஆஸ்கியின் நீட்டிப்புக் குறியீடுகள் போன்ற ஒரு தரவுக் குறியாக்க முறைமை (Data Encryption System)யில் அனுமதிக்கப்பட்டுள்ள குறியீடுகளின் திரட்டு.

symbol string : குறியீட்டு சரம்.

symbol table: குறியீட்டு அட்டவனை.

symbolic address: குறியீட்டு முகவரி.

symmetric digital subscriber line : சீரொழுங்கு இலக்கமுறை சந்தாதாரர் இணைப்பு: செப்புக் கம்பிகளில் இரு திசைகளிலும் வினாடிக்கு 384 கிலோ பிட்டுகள் வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை இயல்விக்கும் இலக்கமுறைத் தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்.

SYN : சின்; எஸ்ஒய்என் : ஒத்திசைவு செயல்படா எழுத்து என்று பொருள்படும் Synchronized ldle Character என்பதன் சுருக்கம். நேர ஒத்திசைவுள்ள தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் எழுத்து/குறி. அனுப்பும்/