பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

synchronous DRAM

434

system binary numaber



பெறும் சாதனங்கள் நேர ஒத்திசைவைப் பராமரிக்க இது உதவும்.

synchronous DRAM : ஒத்திசைவு டிரேம் : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகத்தின் (Dynamic Random Access Memory) ஒருவகை. வழக்கமான டி'-ரேம் நினைவகத்தை விட உயர்கடிகார வேகத்தில் செயல் படக் கூடியது. ஒருவகை வெடிப்பு நுட்பத்தின் மூலம், அடுத்து அணுக விருக்கும் நினைவக இருப்பிடத்தை முன்னறிந்து செயல்படும் திறன் படைத்தது.

sychromized : ஒத்திசைந்த.

synchromize now : ஒத்திசைவி.

synchronous UART : ஒத்திசைவு யுஏஆர்டி : யுஏஆர்டி என்பது உலகப் பொதுவான ஒத்திசையா வாங்கி/அனுப்பி (Universal Asynchronous Receiver/Transmitter) என்பதைக் குறிக்கிறது. அனுப்பியும் வாங்கியும் ஒரே நேரச்சமிக்கையைப் பகிர்ந்து கொண்டால் ஒத்திசைவு நேரியல் தகவல் பரிமாற்றம் இயலும்.

sync signal : ஒத்திசை சமிக்கை : ஒத்திசைவுச் சமிக்கை (Synchronization Signal) என்பதன் சுருக்கம். கிடைவரி (Raster) ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. ஒவ்வொரு வருடுவரியின் இறுதியையும் (கிடைமட்ட ஒத்திசைச் சமிக்கை), கடைசி வருடுவரியின் இறுதியையும் (செங்குத்து ஒத்திசைச் சமிக்கை) இது கொண்டிருக்கும்.

syntax analyser: சொற்றொடர் பகுப்பி; சொற்றொடரிலக்கண பகுப் பாய்வி.

synonym dictionary : இணைச்சொல் அகராதி (அகரமுதலி).

syntax checker : தொடரமைப்பு சரிபார்ப்பி : ஒரு நிரலாக்க மொழியில் கட்டளைத் தொடர் அமைப்புகளிலுள் பிழைகளை அடையாளம் காட்டும் ஒரு நிரல்.

synthesis : ஒருங்கிணைவு; இணைப் பாக்கம் : தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு): தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கிணைத்து மனிதப் பேச்சினை செயற்கையாக உருவாக்க முடியும்.

.sys : .சிஸ்: முறைமை தகவமைவுக் கோப்புகளின் வகைப்பெயர். (extention).

sysadmin : சிஸ்அட்மின் : பெரும்பாலான யூனிக்ஸ் இயக்க முறைமைகளில் முறைமை நிர்வாகியின் புகுபதிகைப் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி.

system administrator : முறைமை நிர்வாகி : ஒரு பல்பயனாளர் கணினி அமைப்பு அல்லது தகவல் தொடர்பு அமைப்பு அல்லது இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். இவரே, பயனாளர்களை உருவாக்குகிறார்; நுழைசொல் (password) வழங்குகிறார். பல்வேறு பாதுகாப்பு அணுகுநிலைகளை உருவாக்குகிறார். சேமிப்பு இடப் பரப்புகளை ஒதுக்கீடு செய்கிறார். அத்துமீறி நுழையும் நபர்களை, நச்சுநிரல்களைக் கண்காணிக்கிறார்.

system, audit of computer : கணினி முறைமைத் தணிக்கை.

system, binary number : இரும எண் முறைமை.