பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

TcL/Tk

440

techie


தகவல் தொடர்பு தவிர இணைய இணைப்புக்கும் டீ-சுமப்பிகள் பயன்படுகின்றன.

TcL/Tk:டிசிஎல்/டிகே;கருவிக்கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு உரை நிரல் மொழியும் (TCL),ஒரு வரைகலைப் பயனாளர் இடைமுகக் கருவித் தொகுதியும் (TK) இணைந்த ஒரு நிரலாக்க அமைப்பு.டீசிஎல் மொழி ஊடாடு நிரல்களுக்கும்,உரைத் தொகுப்பான்களுக்கும் பிழை நீக்கிகளுக்கும்,செயல்தளத்துக்கும் கட்டளைகளை வழங்க முடியும்.அவை சிக்கலான தரவுக் கட்டமைப்புகளை உரை நிரல்களில் உட்செருகுகிறது.

TCP:டீசிபீ: பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.டீசிபி/ஐபி நெறிமுறையில் உள்ளிணைந்தது.தகவலை சிறுசிறு பொட்டலங்களாக்கி,ஐபீ மூலமாக அனுப்பி வைக்கிறது.மறு முனையிலிருந்து ஐபி மூலம் பெறப்படும் தகவல் பொட்டலங்களைச் சரிபார்த்து ஒன்றுசேர்த்து முழுத் தகவலை வடிவமைக்கிறது. ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்குகளில் போக்குவரத்து அடுக்கில் டீசிபீ செயல்படுகிறது.

TCP/IP:டீசிபீ/ஐபி: பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென அமெரிக்கப் பாதுகாப்புத்துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு,இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரி மாற்றத்துக்கான,ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறிமுறையாய் நிலைபெற்றுவிட்டது.

TCP/IP stack:டீசிபி/ஐபி அடுக்கு:டீசிபி/ஐபி நெறிமுறைகளின் தொகுப்பு.

td:டீ.டி:ஓர் இணையதள முகவரி சாட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

tear-off:பிய்த்தெடு; கிழித்தெடு : வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக்கொள்ளும் வசதி உண்டு.எடுத்துக்காட்டாக,வரைகலைப் பயன்பாடுகள் பலவற்றிலும் பட்டிகள்,கருவிப் பெட்டிகள் போன்றவற்றை இழுத்துச் சென்று வேறிடத்தில் வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

techie:நுட்பி;நுட்பர்:தொழில் நுட்பம் தெரிந்த நபர்.பயனாளர் பணியாற்றும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ,ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியாமல் போனாலோ,உடனடியாகத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறக்கூடிய நபர். நுட்பர் ஒரு பொறியாளராக இருக்கலாம் அல்லது ஒரு தொழில்நுட்பாளராக இருக்கலாம்.ஆனால், பொறி