பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

text string search

443

the world-public access UNIX


கள்,எண்கள்,ஏனைய குறிகள் மட்டுமே திரையில் தோன்றமுடியும்.வரைகலைப் படிமங்களைக் காட்ட முடியாது.அதுமட்டுமின்றி,வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களையும் (சாய்வெழுத்து (Italics),மேல்எழுத்து(superscript),கீழ்எழுத்து (subscript)]முடியாது.சுருக்கமாக,விசிவிக் (WYSIWYG-What You See Is What You Get) சாத்தியமில்லை எனலாம்.

text string search:உரைச்சாரம் தேடல்.

text to columns:உரையை நெடுக்கையாக்கு.

.tf:.டீ.எஃப்: ஓர் இணையதள முகவரி தெற்கு ஃபிரான்ஸ் பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

tg:.டீஜி:ஓர் இணயைதள முகவரி டோகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

TGA:டீஜிஏ:1.டார்கா (targa) என்பதன் சுருக்கம்.ட்ரூவிஷன் நிறுவனம் உருவாக்கிய கிடைவரி (Raster) வரைகலைக்கோப்பு வடிவம், 16 துண்மி(பிட்),24துண்மி (பிட்),32 துண்மி(பிட்) நிறங்களைக் கையாளவல்லது.2.மிகு தெளிவுள்ள ஒளிக்காட்சி வரைகலைப்பலகை வரிசைகளின் வணிகப் பெயர்.

.th:.டீ.ஹெச்:ஓர் இணையதள முகவரி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

the microsoft network(MSN): மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் (எம்எஸ்என்): மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின்,பல்வேறு வசதிகள் நிறைந்த நிகழ்நிலைச் சேவை.1995ஆம் ஆண்டு ஆகஸ்டில், விண்டோஸ் 95 அறிமுகப்படுத்தப்பட்டபோது தொடங்கப்பட்டது.

thermal wax-transfer printer:வெப்ப மெழுகு-மாற்றல் அச்சுப்பொறி: ஒரு சிறப்புவகை தொடா அச்சுப்பொறி (Non-impact printer)வெப்பத்தின் மூலம் வண்ணமெழுகினை தாளின் மீது உருகவைத்து படிமங்கள் வரையப்படுகின்றன.வழக்கமான வெப்ப அச்சுப்பொறியைப்போலவே,சூடாக்குவதற்கு ஊசி(பின்)கள் பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ண மெழுகு பூசப்பட்ட நாடா மீது சூடான ஊசிகள் படும்போது ஊசிகளுக்கு அடியிலுள்ள மெழுகு உருகித் தாளில் ஒட்டிக் கொள்கின்றன. ஊசிகள் தாளைத் தொடுவதில்லை.

thermography:வெப்பக்கதிர்.

therminomic:மின்மயத்தூள்

the world-public access UNIX: உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ்: பாஸ்டனை மையமாகக் கொண்ட மிகப்பழைய பொது அணுகு இணையச் சேவை வழங்கன்.1990 ஆண்டிலிருந்து இவ்வமைப்பு,தொலைபேசி மூலம் இணையத்தை அணுகும் வசதியைத் தந்தது.அதாவது பொதுமக்கள் இணையத்தை அணுகமுடியும்.வைய விரிவலை அணுகல்,யூஸ்நெட்,ஸ்லிப்/பீபீ.பீ. டெல்நெட்,எஃப்.டீ.பீ.ஐஆர்சி,கோஃபர், மின்அஞ்சல் போன்ற பிற வசதிகளையும் வழங்குகிறது.1995 ஆம் ஆண்டிலிருந்து யுயுநெட் மூலமாக உள்ளூர் தொலைபேசி வழி அணுகலையும் அளித்து வருகிறது.