பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tie line

445

timed backup


tie line:முடிச்சு இணைப்பு: ஒரு நிறுவனத்தின் இரண்டு அல்லது மேற்பட்ட பிரிவுகளை(தொலை தூரக் கிளைகளை) இணைப்பதற்காக,ஒரு தகவல் தொடர்பு நிறுவனத் திடமிருந்து (தொலை தொடர்புத் துறையினர்) குத்தகைக்குப் பெறப்படும் ஒரு தனியார் இணைப்பு.

.tif:டிஃப்: குறியிட்ட படிமக்கோப்பு வடிவில்(Tagged Image File Format-TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர்.

TIFForTIF:டிஃப்:குறியிட்ட படிமக்கோப்பு வடிவாக்கம் எனப் பொருள்படும் Tagged Image File Format அல்லது Tag Image File Format என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சாம்பல் அளவீட்டு வரைகலைப் படிமங்களை வருடி,சேமித்து,பரிமாறிக்கொள்ள,பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோப்பு வடிவம்.பழைய வரைவோவியப் பயன்பாடுகளில் (பழைய மேக்பெயின்ட் போன்ற) டிஃப் வடிவாக்கம் மட்டுமே இருந்து வந்தது.ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன நிரல்களில் ஜிஃப்,ஜேபெக் போன்ற விதவித மான வடிவாக்கங்களில் படிமங்களைச் சேமிக்க வசதிகள் உள்ளன.

TIGA:டிகா: டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வரைகலைக் கட்டுமானம் என்று பொருள்படும் Texas Instruments Graphics Architecture starp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் 340:0 வரைகலைச் செயலியின் அடிப்படையில் அமைந்த,ஒளிக்காட்சி தகவிக் கட்டுமானமாகும் இது.

tite vertically:செங்குத்தாய் அடுக்கு.

time accass:அணுகு நேரம்.

time acceleration:முடுக்கு நேரம்.

time add:நேரம் கூட்டு.

time add-substract:நேரம் கூட்டு-கழி.

time,available machine:இருக்கும் பொறி நேரம்;மொழிமாற்று நேரம்.

time,compile:தொகு நேரம்.

time error,run:இயக்க நேரப் பிழை.

time,idle:செயல்படா நேரம்.

time out settings:நேர முடிவு அமைப்புகள்.

time,real:நிகழ்வு நேரம்.

time,response:மறுமொழி நேரம்.

time,run:இயக்க நேரம்.

time,search:தேடு நேரம்.

time,seek:நாடும் நேரம்,கண்டறி நேரம்.

time services:நேரத் தொடர்.

time,share:பகிர்வு நேரம்.

time to live:வாழ்நாள்,ஆயுட்காலம்: இணையத்தில் அனுப்பப்படும் ஒரு தகவல் பொதியின் தலைப்புப்புலம்.அந்தப் பொதியை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

time total:மொத்த நேரம்.

time transfer:பரிமாற்ற நேரம்.

tilt down:கிடைமட்டமாய் சரிவாக்கு.

tilt left.இடப்பக்கம் சரிவாக்கு.

tilt right:வலப்பக்கம் சரிவாக்கு.

tiltup:சாய்த்து உயர்த்து.timed backup:நேரங்குறித்த காப்பு.