பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

associated document

43

asynchronous data transmission


வகைப்பெயர் அடிப்படையில் குறிப்பிட்ட பயன்பாடு முதலில் இயக்கப்பட்டுப் பிறகு அந்தக் கோப்பு அந்தப் பயன்பாட்டினுள் திறக்கப்படும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் இயக்க முறைமையில் doc என்னும் வகைப்பெயருள்ள கோப்புகளைத் திறக்க ஆணையிட்டால், முதலில் வேர்டு இயக்கப்பட்டு அதனுள் அக்கோப்பு திறக்கப்படுவதைக் காணலாம்.

associated document : இணைவு ஆவணம்.

associative retrieval : சார்பு மீட்பு:இணை மீட்பு.

associative store : சார்புறு சேமிப்பு.

association for computing machinery : கணினி எந்திரவியலார் சங்கம் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்ப மேதமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் அமைக்கப்பட்டது.

Association of C and C++ users : சி மற்றும் சி++ பயனாளர்கள் சங்கம்: கணினி நிரலாக்க மொழிகளான சி, சி++ மற்றும் அவற்றின் உறவு மொழிகளில் ஆர்வமுள்ளவர்களின் சங்க அமைப்பு. இம்மொழிகளின் தொழில்முறை நிரல் வரைவாளர்கள், இவற்றின் மொழி மாற்றிகளை (compilers) உருவாக்கும்/விற்பனை செய்யும் வணிகர்கள், தொழில் முறை அல்லாத நிரல் வரைவு ஆர்வலர்கள் ஆகியோர் இச்சங்க உறுப்பினர்கள்.

assumed decimal point : எடுபதின்மப்புள்ளி; கற்பனைப் பதின்மப் புள்ளி.

astomisher : வியப்பாளி.

asymmetric key cryptography : ஒழுங்கற்ற விசை, மறைக்குறியியல்.

asymmetrical transmission : செஞ்சீரிலா செலுத்துகை, சமச்சீரற்ற அனுப்பீடு : அதிவேக இணக்கிகளில் (modems) பயன்படுத்தப்படும் அனுப்பீட்டு முறை. குறிப்பாக வினாடிக்கு 9,600 துண்மி(பிட்]கள், அதற்கும் அதிகமாக அனுப்பவல்ல இணக்கிகளில் இம்முறை செயல் படுத்தப்படுகிறது. இம்முறையில் ஒரே நேரத்தில் தகவலை வெளிச் செலுத்தவும் உள்வாங்கவும் முடியும். தொலைபேசித் தகவல் தடத்தின் அலைக் கற்றையை இரு பாதை களாக்கி ஒன்றில் 300 முதல் 450 துண்மிகள் (வினாடிக்கு) வரையும் இன்னொரு பாதையில் 9,600 துண்மி கள் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

asymmetric digital subscriber line : செஞ்சீரிலா இலக்கமுறை சந்தாதாரர் தகவல் தடம் : சாதாரணமான முறுக்கிய இணை தொலைபேசிச் செப்புக் கம்பிகள் வழியாகவே ஒளிக்காட்சிச் சமிக்கை உட்பட மிகுவேக இலக்க முறைத் தகவல் தொடர்பைச் சாத்தியமாக்கும் வகையில் தொழில் நுட்பமும் சாதனங்களும் மேம்பட்டுள்ளன. இறங்கு திசையில் வினாடிக்கு மெகா துண்மி(மெகாபிட்)கள் வரையிலும், ஏறு திசையில் 800 கிலோ துண்மி(பிட்)கள் வரையிலும் தகவல் பரிமாற்றம் இயலும்.

asynchronous communication : ஒத்தியங்காத் தகவல் தொடர்பு:நேரச் சீரற்ற தொடர்பு; ஒத்திசைவில்லாத தகவல் தொடர்பு.

asynchronous data transmission : நேரச் சீரிலா தகவல் அனுப்புகை; ஒத்தியங்கா தகவல் அனுப்புகை.