பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tool bar

448

topic group


கடைப்பிடிக்கின்ற,பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை,பகிர்வு தகவல் நெடுவழியில் பிணைக்கப்பட்டிருக்கும்).தகவல் அனுப்பும் உரிமையை வழங்கும் வில்லை ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்கு அனுப்பப்படும்.ஒவ்வொரு நிலையமும் வில்லையைச் சிறிது நேரம் வைத்திருக்கும். அந்நேரத்தில் அந்நிலையம் மட்டுமே தகவல் அனுப்ப முடியும்.அதிக முன்னுரிமை பெற்ற நிலையத்திலிருந்து அதற்கடுத்த முன்னுரிமை பெற்ற நிலையத்துக்கு வில்லை அனுப்பி வைக்கப்படும்.அந்நிலையம்,பாட்டையில் அடுத்த நிலையமாக இருக்க வேண்டியதில்லை.சுருங்கக் கூறின்,வில்லையானது பிணையத்தில் ஒரு தருக்க நிலை வளையத்தில் (Logical Ring) சுற்றிவருகிறது எனலாம்.வளையக் கட்டமைப்பில் இருப்பதுபோன்று பருநிலை வளையத்தில் (Physical Ring) சுற்றி வருவதில்லை.இத்தகு பிணையங்கள் ஐஇஇஇ 802.4ல் வரையறுக்கப்பட்டுள்ளன.

tool bar:கருவிப்பட்டை.

toolbox:கருவிப்பெட்டி:முன் வரையறுக்கப்பட்ட(பெரும்பாலும் முன்பே மொழிமாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக,ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு,ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழுதும் ஒரு நிரலர் இந்த மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

toolkit software:கருவித் தொகுதி மென்பொருள்

tools:கருவிகள்.

top-down design:மேல் கீழ் வடிவமைப்பு: ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர்நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்)வரையறுப்பதில் தொடங்குகிறது.ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றன.இவ்வாறு அடுத்தடுத்த நிலைக்குச் செல்லல்.

top-down programming:மேல் கீழ் நிரலாக்கம்:நிரலாக்கத்தில் ஓர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப்பகுதி எழுதப்படும். முதன்மைப்பகுதியில் பல்வேறு துணைநிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன்பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும்.அதில் இடம்பெறும் அடுத்தநிலைத் துணைநிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும்.

topic drift:தலைப்பு நழுவல்: தலைப்பு திசைமாறல்:இணையத்தில் நடைபெறும் நிகழ்நிலைக் கலந்துரையாடலின் மூலக் கருப்பொருள்,தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற தலைப்புக்குத் தாவுதல். எடுத்துக்காட்டாக,தொலைக்காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது,திரைப் படத்துக்குத் தாவி,பிறகு செய்தித்தாளுக்குப் போய்,அரசியலுக்குச் சென்று,ஊழலுக்கு மாறி, விலைவாசியில் தொடர்ந்து,பழங்கள் காய்கறிகளின் நன்மையில் முடியலாம்.

top/head:மேல்/தலை(முனை).

topic group:தலைப்புக்குழு: நிகழ்நிலை விவாதப் பகுதி. ஒரு