பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transfer time

451

trash


மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

transfer time:பரிமாற்ற நேரம்:தகவல் பரிமாற்றத்தில் தகவல் பரிமாற்றம் தொடங்கிய நேரத்துக்கும் முடிந்த நேரத்துக்கும் இடைப்பட்ட நேரம்.

transient portion:தற்காலிகப் பகுதி; மாறும் பகுதி.

transistor,டிரான்சிஸ்டர்; மின்மப் பெருக்கி இடம்மாற்று (transfer),மின்தடை (resistor) என்ற இருசொற்களின் கூட்டு.திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு.மூன்று முனைகளுடன் இருக்கும்.(1)அடிவாய்(base).(2)உமிழி(emitor). (3)திரட்டி (collector).இதில் பாயும் மின்னழுத்தம் (Voltage) அல்லது மின்னோட்டம் (Current) வேறொரு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும், மின்மப்பெருக்கி பல்வேறு பணிகளைச் செய்கிறது.(எ.டு) திறன் பெருக்கி (amplifier), நிலைமாற்றி(switch),அதிர்வி(oscillator).நவீன மின்னணுவியலில் தவிர்க்கப்பட முடியாத மிக அடிப்படையான பொருள்கூறு ஆகும்.

translation time:பெயர்ப்பு நேரம்.

transition:மாறுகை.

transliteration:ஒலிபெயர்ப்பு; Computer என்ற சொல்லைக் கம்ப்யூட்டர் என எழுதுவது.

transmission, asynchromous data: ஒத்திசையா தரவுப் பரப்புகை.

transmission,data:தரவுப் பரப்புகை.

transmission medium:செலுத்து ஊடகம்.

transmission speed:வேகம்;பரப்பு வேகம்.

transmission retry:பரப்பு மறுமுயற்சி

transmitter:அனுப்பி;பரப்பி;செலுத்தி: மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தகவலை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம்.

transperency adapter:மறைப்பிலாத் தகவி.

transport layer:போக்குவரத்து அடுக்கு: ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கில் நான்காவது அடுக்கு. பிணைய அடுக்குக்கு நேர் மேலே உள்ளது. சேவையின் தரத்துக்கும்,தகவலைத் துல்லியமாக வினியோகிக்கவும் உதவுகிறது.பிழையைக் கண்டறிதல்,அவற்றைச் சரிப்படுத்தும் பணிகள் இந்த அடுக்கில் நடைபெறுகின்றன.

transputer:டிரான்ஸ்பியூட்டர்;சில் கணினி: மின்மப்பெருக்கி (Transistor),கணினி (Computer)ஆகிய இருசொற்களின் கூட்டுச் சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக் கணினி.ராம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு.இணைநிலைக் கணிப்பணி அமைப்புகளுக்கு அடிப்படையான கட்டுமான உறுப்பாகும்.

Trash:குப்பைத் தொட்டி:குப்பைக் கூடை: மெக்கின்டோஷ் ஃபைண்டர் பயன்பாட்டில் குப்பைத் தொட்டி போல் தோற்றமளிக்கும் ஒரு சின்னம். ஒரு கோப்பினை அழிக்க விரும்பும் பயனாளர் அக்கோப்புக்குரிய சின்னத்தை இழுத்துவந்து குப்பைத் தொட்டியில் விட வேண்டும்.குப்பைத் தொட்டியில்