பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

try

453

tunnel


அறிமுகப்படுத்திய வெளிக்கோட்டு எழுத்துருத் தொழில்நுட்பம்.மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டது.இது ஒரு விசிவிக் (WYSIWYG) எழுத்துருத் தொழில்நுட்பம் ஆகும். அதாவது,திரையில் காணும் எழுத்து வடிவங்கள் அப்படியே அச்சில் கிடைக்கும்.

try:முயல்.

ΤSΑΡΙ டீசாப்பி:டீஎஸ்ஏபிஐ:தொலைபேசிச் சேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Telephony Services Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் தொலைபேசி அமைப்புக்கும் ஒரு கணினிப் பிணைய வழங்கனுக்கும் இடையேயான இடைமுகத்துக்குரிய தர வரையறைகள்.நாவெல் நிறுவனமும் ஏடீ&டீ நிறுவனமும் இணைந்து உருவாக்கியவை.பல்வேறு தொலைபேசிக் கருவி உற்பத்தியாளர்களாலும் மென்பொருள் தயாரிப்பாளர்களாலும் ஆதரிக்கப்படுகிறது.

TSR:டீஎஸ்ஆர்:நினைவகத்தில் தங்கிச் செயல்படுதல் என்று பொருள்படும் Terminate and Stay Resident என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு நிரலை இயக்கியவுடன் நினைவகத்தில் சென்று தங்கிவிடும்.ஆனால் செயல்படாது.ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும் போது அல்லது வேறொரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது நினைவகத்தில் இருக்கும் நிரலை இயக்க முடியும்.எம்எஸ் டாஸ் போன்ற பல்பணித் திறனற்ற இயக்க முறைமைகளில் இதுபோன்ற நிரல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

.tt:.டீடீ:ஓர் இணையதள முகவரி டிரினிடாட் டொபேக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களபபெயர்.

TFN:டீடிஎஃப்என்: இப்போதைக்கு டாட்டா என்று பொருள்படும் Ta Ta for now என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கலந்துரையாடல் குழு அல்லது தொடர் அரட்டையில்(IRC)பங்கு பெற்றுள்ள ஒருவர் குழுவிலிருந்து தற்காலிகமாக விலகிச் செல்லல். பிறகு வந்து சேர்ந்துகொள்வார்.

TTY:டீடீஒய்:தொலைத் தட்டச்சு (Teletypewriter)என்பதன் சுருக்கம்.தொலைபேசி இணைப்பு வழியாக நடைபெறும் குறைந்தவேக தகவல் தொடர்புக்கான கருவி.ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளீடு செய்ய ஒரு விசைப்பலகையும்,தொலைவிலிருந்து வரும் தகவலை ஒவ்வொரு எழுத்தாக அச்சிட அச்சுப்பொறியும் கொண்டது.

tube,cathode:எதிர்மின் குழாய்.

tube store,cathod ray:எதிர்மின் கதிர்க் குழாய் சேமிப்பு.

tunnel:சுருங்கை வழி: ஒரு நெறிமுறையின் கீழ் உருவாக்கப்பட்ட பொதி அல்லது செய்தியை இன்னொரு நெறிமுறைக்கான பொதியில் சுற்றிவைத்தல்.இப்படிச் சுற்றி வைத்த பொதி, மேலுறை நெறிமுறையின் பிணையத்தில் இன்னோர் இடத்துக்கு அனுப்பப்படும்.நெறிமுறைக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவே இந்த வகையான பொதிப் பரிமாற்றம் பயன்படுத்தப்படுகிறது.