பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asynchronous input

44

AT Bus


asynchronous input : ஒத்தியங்கா உள்ளீடு ; நேரச்சீரிலா உள்ளீடு.

asynchronous operation : ஒத்தியங்காச் செயல்பாடு : கடிகாரம் போன்ற ஒரு நேரச் சாதனத்தை சாராமல் தனித்தியங்கும் ஒரு செயல்பாடு.எடுத்துக்காட்டாக, இரண்டு இணக்கிகள் தமக்குள் ஒத்தியங்காத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது நேரக் கணக்கின் படி தகவலை அனுப்புவதில்லை. தொடங்கு, நிறுத்து என்னும் சமிக்கையை ஒன்றுக்கொன்று அனுப்பி தமக்குள் சீராகத் தகவலை பரிமாறிக் கொள்கின்றன. ஒத்தியங்கு செயல்பாட்டுடன் ஒப்பிடுக.

asynchronous procedure call : ஒத்தியங்காச்செயல்முறை அழைப்பு: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஆணைத் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த ஆணைத்தொடர் இயங்காதபோதும், அதேபோன்ற நிபந்தனைகள் நிலவுமெனில், இயக்க முறைமையின் கருவகம் (kernel) ஒரு மென்பொருள் குறுக்கீட்டை நேரடியாக வழங்கி, அந்த ஆணைத் தொடரை இயக்கி அதிலுள்ள செயல்கூற்றையும் அழைத்துச் செயல்படுத்தும்.

asynchronous terminal : ஒத்தியங்கா முனையம், நேரச் சீரிலா முனையம்.

asynchronous transfer mode : நேரச் சீரிலா பரிமாற்றுப் பாங்கு.

ATA : ஏடீஏ : உயர்நிலைத் தொழில் நுட்ப உடனிணைப்பு என்று பொருள்படும் Advanced Technology Attachment என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐடிஇ நிலைவட்டு இயக்கத்துக்கு அன்சிக் குழுமத்தின் எக்ஸ்எஸ்டீ10 குழு தந்த முறைப்படியான பெயர் இது.ஏடீ உடனிணைப்பு என்றும் இதற்குப் பெயர்.

ATA hard disk drive card : ஏடீஏ நிலைவட்டு இயக்கக அட்டை: ஏடீஏ நிலைவட்டு இயக்கத்துக்கான கட்டுப்பாடு இடைமுகமாய் பயன்படும் விரிவாக்க அட்டை. இவை பெரும்பாலும் ஐஎஸ்ஏ செருகுவாய்களில் பொருத்தப்படும் அட்டைகளாக இருக்கும்.

ATA/IDE hard disk drive : ஏடீஏ/ஐடிஇ நிலைவட்டகம்/நிலைவட்டு இயக்ககம் :ஐடிஇ(IDE-Intergrated Drive Electronics),ஏடீஏ(AT Attachment) ஆகிய இரண்டும் ஒரே தொழில் நுட்பத்தையே குறிக்கின்றன. ஒரு வட்டகத்தின் கட்டுப்பாட்டுச் சாதனத்தையும் வட்டகத்தோடு ஒருங்கிணைக்கும் வட்டு இயக்கக வடிவமைப்பாகும். இதன்மூலம் இடை முகத்துக்கான செலவு குறைகிறது.

ATAPI : அட்டாப்பி : குறுவட்டுச் சாதனங்களைக் கையாள, ஐபிஎம் பீசி ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்படும் இடைமுக சாதனம்.

at birth : பிறக்கும்போது.

AT Bus : ஏடீ மின்வழித்தடம்; ஏ.டீ மின்பாட்டை : ஐபிஎம் ஏடீ மற்றும் அதன் ஒத்தியியல்புக் கணினிகளில் தாய்ப்பலகையுடன் புறச்சாதனங்களை இணைக்கும் மின்வழித் தடம். முன்பிருந்த பீசி மின்பாட்டை 8 துண்மி (பிட்)களையே ஏந்திச் செல்லும். ஏ.டீ மின்பாட்டையில் 16 துண்மிகள் (பிட்கள்) ஒருசேரப் பயணம் செய்யமுடியும். இது