பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Uniform Resource Citation

460

Unit, audio response



கையாள நேரும்போது குழப்பமில்லாமல் அதே பெயரை அதே பாதையுடன் அணுக வழியேற்படும்.

Uniform Resource Citation: ஒருசீரான வள விவரிப்பு  : வைய விரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIS), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவைபோன்ற பண்புக்கூறுகளையும், மதிப்புகளையும் கொண்டிருக்கும்.

Uniform Resource Identifier : ஒரு சீரான வள அடையாளங்காட்டி : இணையத்தில் எந்த மூலையில் இருப்பினும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் வகை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் அடையாளங்காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்துச் சரம். இது, ஒருசீரான வளப் பெயரையும் (URNS) ஒருசீரான வள இடங்காட்டியையும் (URL) உள்ளடக்கியது.

Uniform Resource Name : ஒருசீரான வளப் பெயர்  : இணையத்தில் இருக் கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக் கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை . ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்பிற்கான வரன் முறைகள், இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force - IETF) வின் பரிசீலணையில் உள்ளது. urn:, fpi;, path; போன்ற திட்டமுறையிலடங்கிய அனைத்து ஒருசீரான வள அடையாளங்காட்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவை, ஒருசீரான வள இடங்காட்டிகளையும் (URLs) கொண்டிருக்காது. .

UniForum : யுனிஃபாரம் : 1. திறந்த நிலை முறைமை வல்லுநர்களின் பன்னாட்டுச் சங்கம். யூனிக்ஸ் பயனாளர்கள், நிர்வாகிகளைக் கொண்ட அமைப்பு. 2. யுனிஃபாரம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, சாஃப்ட்பாங்க் காம்டெக்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட தொடர்ச்சியான யூனிக்ஸ் வணிகக் கண்காட்சிகளைக் குறிக்கிறது.

utility programme : பயன்கூறு நிரல்

uninstall: நிறுவியது நீக்கு ; நிறுவு கைநீக்கு : ஒரு கணினியில் நிறுவப்பட்ட மென்பொருள் தொகுப்பை முற்றிலுமாக நீக்கிவிடுதல். விண்டோஸ் 95/98/என்டி முறைமைகளில் ஒரு மென்பொருளை நிறுவும்போது, சில கோப்புகளை முறைமைக் கோப்புறையில் எழுதிக் கொள்ளும். அம் மென்பொருளின் தகவமைவுகளை பதிவேட்டிலும் (Registry) குறித்துக் கொள்ளும். எனவே ஒரு மென்பொருளை சாதாரண முறையில் அழித்தோம் (Delete) எனில் மேற்சொன்ன தகவல்கள் நீக்கப்படாமல் தங்கிப்போகும். பின்னாளில் தொல்லையேற்படும். எனவே, நிறுவுகைநீக்கல் முறையிலேயே ஒரு மென்பொருளை அகற்றவேண்டும்.

union-compatible : இணைக்கத் தகு : தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.

unit, visual display : புலன்காட்சி அலகு.

unit, audio response: கேட்பொலி உணர் அலகு; கேட்பொலி உணர்பாகம்.