பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unmount

462

uppercase



வழங்கனால் பெறப்படும் அஞ்சல் பட்டியல்களில் செய்திகள், கட்டுரைகள், சந்தாதாரர்களுக்குத் தாமாகவே அனுப்பி வைக்கப்படும்.

unmount : பெயர்த்தெடு; கழற்று: நீக்கு : ஒரு கணினியில் ஒரு வட்டினையோ நாடாவையோ பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுதல். வன்பொருளாகக் கழற்றியெடுக்க வேண்டியதில்லை. மென்பொருள் கட்டளை மூலமாகவும் செய்ய முடியும். யூனிக்ஸ் முறைமையில் இச்சொல் அதிகம் பயன்படுகிறது.

unread : படிக்கப்படாத : 1. ஒரு செய்திக்குழுவில் பயனாளர் ஒருவர் இதுவரை வாசித்திராத கட்டுரை. செய்தி வாசிப்புக் கிளையன் நிரல், பயனாளரால் படிக்கப்பட்ட, படிக்கப்படாத கட்டுரைகளுக் கிடையே வேறுபாடு கண்டு, அவர் இதுவரை படித்திராத கட்டுரைகளை மட்டுமே வழங்கனிலிருந்து பதிவிறக்கம் செய்து தரும். 2. பயனாளருக்குக் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல், ஆனால் மின்னஞ்சல் நிரல் மூலமாக இன்னும் திறந்து படிககப்படாதது.

unrecoverable error: திருத்த முடியாப் பிழை; மீட்க முடியாப் பிழை : ஒரு நிரலில் ஏற்படும் பிழை. சரிசெய்ய முடியாத நிலையில் இருத்தல். கணினிச் செயல்பாட்டில் ஏற்படும் பிழைநிலையையும் குறிக்கும். புறநிலை மீட்பு நுட்பத்தின் மூலமே சரி செய்ய முடிகிற அழிவுசெய் பிழை.

unsealded twisted pair (UTP) : உறையிடா முறுக்கிணை வடம்.

unsent message : அனுப்பாச் செய்தி.

unshielded cable : உறையிடா வடம்: உலோக உறையிடப்படாத வடம்.இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் காரணமாகவே, உறையிடா வடங்கள் குறைந்த தூரத் தகவல் தொடர்புக்கே பயன்படுத்தப்படுகின்றன.

unsubscribe : சந்தா நீக்கு : 1. ஒருவர் ஏற்கெனவே சந்தாதாரராக உள்ள ஒரு செய்திக் ழுவின் பெயரைப் பட்டியலிலிருந்து (செய்திவாசிப்பு கிளையன் நிரல் மூலம்) நீக்கி விடுதல். 2. ஒர் அஞ்சல் பட்டியலில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியை நீக்கிவிடல்.

untar : அன்டார் : யூனிக்ஸ் இயக்க முறையில் இருக்கும் ஒரு பயன்கூறு. யூனிக்ஸின் டார் (tar) நிரல்மூலம் ஒன்று சேர்க்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து தனித்தனிக் கோப்புகளாகப் பிரித்தெடுத்தல்.

unzip : அன்ஸிப்: gzip, pkzip மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட காப்பகக் கோப்பினை விரித்துப் பெருக்கும் கட்டளை.

up arrow மேல் அம்புக்குறி.

update : மாற்றல்; இற்றைப்படுத்தல்; புதுப்பித்தல்.

updated driver : புதுப்பித்த இயக்கி.

updating and file maintenance :புதுப்பித்தலும் கோப்பு பராமரித்தலும்.

upgrade processor செயலி மேம்படுத்து.

upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து.

uppercase : பெரிய எழுத்து : ஆங்கில எழுத்துகளில் இருக்கும் அமைப்பு முறை. a என்பது சிறிய எழுத்து