பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

USB

464

user-defined data type


 செயல்முறைகள் இல்லாத சிறந்த வடிவமைப்பைப் பெற்றுள்ளது என்று பொருள்.

ՍՏB யுஎஸ்பி; உலகளாவிய நேரியல் பாட்டை என்று பொருள்படும் Universal Serial Bus என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வினாடிக்கு 1.5 மெகாபிட் தகவல்களை கணினிக்கும் புறச்சாதனங்களுக்ககுமிடையே பரிமாற்றவல்ல நேரியல் பாட்டை. குறுவட்டு (CD-ROM) இயக்ககங்கள், அச்சுப் பொறிகள், இணக்கிகள்(Modems), சுட்டிகள் (mice), விசைப்பலகைகள் போன்ற 127 புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப்பயன் துறை வழியாக கணினியுடன் இணைக்க முடியும். டெய்சி சக்கர இணைப்பின் மூலம் இது சாத்தியம். உடனிணைப்புகளையும், பலவகை தரவுத் தாரைகளையும் ஏற்கும். இன்டெல் நிறுவனம் உருவாக்கியது. டெக் நிறுவன அக்செஸ் பாட்டையுடன் போட்டியிடக் கூடியது, குறிப்பாக குறைவேகப் பயன்பாடுகளில்.

U.S. Department of Defense : யுஎஸ் பாதுகாப்புத்துறை: அமெரிக்க அரசின் இராணுவப் பிரிவுதான் அக்கால ஆர்ப்பாநெட்டை (ARPANET) உருவாக்கியது. Advanced Research Project Agency என்பதன் சுருக்கமே ARPA என்பது. அன்றைய ஆர்ப்பாநெட்தான் இன்றைய இணையமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

use error correction : பிழை திருத்தும் வசதி.

usenet : யூஸ்நெட்: செய்திக் குழுக்களுக்கான பிணையம்.

usenet user list: யூஸ்நெட் பயனாளர் பட்டியல்: மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) பராமரித்து வரும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல். யூஸ்நெட்டில் அஞ்சலிடும் பயனாளர்களின் பெயரையும் மின்னஞ்சல் முகவரிகளையும் இப்பட்டியல் கொண்டிருக்கும்.

user : பயனாளர்கள்.

user account : பயனாளர் கணக்கு : பாதுகாப்பான பல்பயனாளர் கணினி அமைப்புகளில், அதை அணுகவும் அதன் வளங்களைப் பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை. இதுபோன்ற கணக்குகளை முறைமை நிர்வாகி உருவாக்குகிறார். பயனாளர் கணக்கு என்பது, பயனாளர் பெயர், நுழைசொல், உரிமைகள், அனுமதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

user agent : பயனாளர் முகவர்: குறும்பரப்புப் பிணையங்களுக்காக ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில், கிளையன் கணினி, வழங்கனுடன் இணைத்துக் கொள்ள உதவும் ஒரு நிரல்.

user and group accounts : பயனாளர், குழுக் கணக்குகள்.

user and group permissions : பயனாளர், குழு அனுமதிகள்.

user difined: பயனாளர் வரையறுத்த.

user-defined data type : வரையறுத்த வரையறுக்கும் தரவு இனம் : நிரலொன்றில் நிரலர் வரையறுக்கும் தரவு இனம். நிரலாக்க மொழியில் இருக்கும் மூலத் தரவுகளிலிருந்து மாறுபட்டது. பயனாளர் உருவாக்கும் தரவினம் மூலத் தரவிகளின் சேர்க்கையாகவே இருக்கும். பெரும்பாலும் தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும்.

(எ-டு): சி-மொழியில்