பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v.120

467

validation suite


V

v:120:வி.120 ஐஎஸ்டிஎன் இணைப்புகளின் வழியாக நடைபெறும் நேரியல் தகவல் தொடர்பு களுக்காக,சர்வதேச தொலை தகவல் தொடர்பு சங்கம் (ITU) உருவாக்கிய தர வரையறைகள். எளிய அடைவு அணுகல் நெறிமுறை (Lightweight Directory Access Protocol-LDAP) ஒத்த ஒரு நெறிமுறையைப் பயன்படுத்தி தகவல், பொதியுறையிடப்பட்டு அனுப்பப்படுகிறது. ஒரு தகவல் தொடர்புத்தடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை ஒன்று சேர்த்து அனுப்பிவைக்க முடியும். W20,W30:வி20,வி30: என்இசி நிறுவனம் உருவாக்கிய நுண்செயலிகள். இன்டெல் 8088, 8086 ஆகியவற்றை விட சற்றே மேம்பட்டவை. அதே ஆணைத் தொகுதிகளை, ஆனால் வேறுபட்ட நுண் ஆணைகளைக் (microcode)கொண்டவை.

V.27ter:வி.27டெர்: 2,400 மற்றும் 4,800 பிட்/வினாடி (bps) வேகத்தில் படிமங்களைப் பரிமாற்றம் செய்யக்கூடிய குழு-3 தொலைநகல் முறையில் பயன்படுத்தப்படும் பண்பேற்றத் திட்டமுறை (modulation scheme)க்கான சிசிஐடிடி (இப்போது ஐடியு-டீ என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு பரிந்துரைத்த வரன் முறைகள்.

V.29:வி.29: 9,600 மற்றும் 7,200 பிட்/வினாடி (bps) வேகத்தில் தொலைபேசி இணைப்பு வழியாக படிமங்களை அனுப்புகின்ற குழு-3 தொலைநகல் முறையில் பயன்படுத்தப்படும் பண்பேற்ற திட்டமுறைக்கான, சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) பரிந்துரைத்த வரன் முறைகள்.

V.32 turbo:வி.32 டர்போ: 19,200 பிட்/வினாடி (bps) வேக இணக்கி (மோடம்)களுக்காக ஏடி&டி நிறுவனம் உருவாக்கிய நெறிமுறை. சிசிஐடிடி வி.32 தரம் நிர்ணயித்துள்ள வேகத்துடன் ஒத்தியல்பானது. ஆனால் இந்த நெறிமுறை ஏடி&டீயின் தனியுரிமையுடையதாகும். சிசிஐடிடி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிசிஐடிடி-யின் வி-வரிசையில் V.32 டர்போவுக்குப் பதிலாக வி.34 இடம்பெற்றுள்ளது.

V.54:வி.54: இணக்கி(மோடம்)களில் மடக்கு சோதனைச் சாதனங்களின் (Loop test devices) செயல்பாடுகளை வரன்முறைப்படுத்தும்,சிசிஐடிடீ (இப்போது ஐ.டீ.யு.டி) அமைப்பின் பரிந்துரை.

V.56bis :வி.56பிஸ்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) பரிந்துரைத்த பிணையப் பரப்புகை மாதிரியம்.இரண்டு கம்பிகளுள்ள குரல்வழி இணைப்புகளில் இணக்கிகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கானது.

va:விஏ: ஓர் இணையதள முகவரி வாட்டிகன் நகரைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

validation rule:செல்லுபடி விதி; ஏற்புத் தகுதி விதி.

validation suite:செல்லுபடி சோதனைத் தொகுதி:ஒரு நிரலாக்க