பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

verbose

470

vertical sync signal


உறவுமுறையை இரு வட்டங்களின் இடநிலையைக் கொண்டு அறியலாம்.இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தருக்கவியல் அறிஞர் திரு.ஜான் வென் (1834-1923) அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

verbose:நீள்விளக்கம்; நீள்செய்தி: மிகச் சுருக்கமான குறிமுறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட,ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல்.

verification:சரிபார்த்தல்.

verifier,automatic:தானியங்குச் சரிபார்ப்பி.

verifier,card :அட்டைச் சரிபார்ப்பி.

verifier,key:விசைச் சரிபார்ப்பு.

verifier,paper tap:தாள்நாடா சரிபார்ப்பி.

VERONICA:வெரோனிக்கா: மிக எளிதில் தேடிக் காணக்கூடிய,கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நெவேடா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை.திறவுச்சொற்கள் அடிப்படையில் கோஃபர் காப்பகங்களைத் தேடிக்கண்டறியும். பயனாளர்கள் தேடலை விரிவாக்கவோ, குறுக்கவோAnd,Or,போன்ற தருக்கச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.தேடிய தகவல் கிடைக்கப்பெறின்,ஒரு புதிய கோஃபர் பட்டியலை உருவாக்கித்தரும்.

vertical:நெடுக்கு:செங்குத்து.

vertical application:செங்குத்துப்பயன்பாடு. ஒரு குறிப்பிட்ட வணிகம் அல்லது தொழிலின் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புநிலைப் பயன்பாடு.(எ-டு):ஓர் உணவகத்தின் விலைப்பட்டி,அன்பளிப்புகள் மற்றும் கையிருப்புக் கணக்குகளைக் கவனிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்.

vertical bandwidth:செங்குத்து அலைக்கற்றை: ஒரு காட்சித் திரை எந்த வீதத்தில் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் அளவீடு. ஹெர்ட்ஸில் (Hz) குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் காட்சித் திரைகளின் செங்குத்து அலைக்கற்றை 45 ஹெர்ட்ஸ் முதல் 100 ஹெர்ட்ஸ்வரை இருக்கும்.

vertical blanking interval:செங்குத்து வெறுமையாக்க இடைவெளி. கிடைவரி-வருடு திரைக்காட்சியில் செங்குத்துவாக்கில் ஒருமுறை திரும்பிவர மின்னணுக்கற்றை எடுத்துக் கொள்ளும் நேரம்.

vertical feed:செங்குத்துச் செலுத்துகை

vertical frequency:செங்குத்து அலைவரிசை.

vertical retrace:செங்குத்து திரும்புகை: கிடைவரி-வருடு(Raster Scan) திரைக்காட்சியில் மின்னணுக்கற்றை திரைமுழுக்க நிரப்பிய பின், கீழ் வலது மூலையிலிருந்து மேல் இடது மூலைக்குத் திரும்பி வருதல்.

'vertical sync signal:செங்குத்து ஒத்திசைவுச் சமிக்கை: கிடைவரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டு